வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 154 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணியில் வாரிகன் 4விக்கெட் ,மோட்டி 3விக்கெட் வீழ்த்தினர்;
முல்தான்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிராக் பிராத்வேட் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . அந்த அணியில் மோட்டி மட்டுமே நிலைத்து ஆடி அரைசதமடித்தார் . அவர் 55 ரன்களில் வெளியேறினார் . வாரிகன் 36 ரன்களும் ரோச் 25 ரன்களும் எடுத்தனர்.இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .பாகிஸ்தான் அணியில் ஹாட்ரிக் வீழ்த்தி நோமன் அலி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் பொறுப்பாக ஆடி முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தார். சவுத் ஷகீல் 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்த்து ஆட்டமிழந்தனர் .
இறுதியில் பாகிஸ்தான் அணி 154 ஆட்டமிழந்தது . வெஸ்ட் இண்டீஸ் அணியில் வாரிகன் 4விக்கெட் ,மோட்டி 3விக்கெட் வீழ்த்தினர் . இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 2வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.