டெஸ்ட் கிரிக்கெட்: கேப்டனான முதல் போட்டியிலேயே மாபெரும் சாதனை.. சுப்மன் கில் அசத்தல்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் இந்த சாதனையை படைத்துள்ளார்.;

Update:2025-06-20 20:01 IST

image courtesy:twitter/@BCCI

லீட்ஸ்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டதால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அவரது முதல் தொடர் இது என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இந்த தொடரில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது. இதில் கே.எல். ராகுல் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் ஜெய்ஸ்வாலுடன் - சுப்மன் கில் கை கோர்த்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு வலு சேர்த்து வருகின்றனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

சுப்மன் கில் கேப்டனாக அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலேயே அரைசதம் அடித்துள்ளார். இந்த சாதனையை படைத்த 9-வது இந்தியர் சுப்மன் கில் ஆவார். அத்துடன் குறைந்த வயதில் (25 வயது 285 நாட்கள்) இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்து அசத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்