ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்க அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
image courtesy: ICC
image courtesy: ICC
Published on

கேப்டவுன்,

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரும் 11ம் தேதி லண்டனில் நடக்கிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இரு ஆட்டங்களும் புலவாயோவில் நடக்கிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்டு பிரேவிஸ், கார்பின் போஷ், டோனி டி ஜோர்ஜி, ஜுபை ஹம்சா, கேசவ் மஹராஜ், க்வேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி நிகிடி, லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனொக்வானே, ப்ரீனெலன் சுப்ரையன், கைல் வெர்ரையன், கோடி யூசுப்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com