தோனியின் பலமே அதுதான் - ஷிகர் தவான்

தோனியின் தலைமையின் கீழ் விளையாடியது குறித்து ஷிகர் தவான் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.;

Update:2025-02-14 21:07 IST

image courtesy: AFP

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன ஷிகர் தவான், சமீபத்திய பேட்டி ஒன்றில் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனியின் தலைமையில் விளையாடியது சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அதில், "தோனி எப்போதுமே களத்தில் அமைதியாக இருந்து வழிநடத்த கூடியவர். வீரர்களிடம் அதிகம் பேசவும் மாட்டார் அதுவே தோனியின் பலமாக இருந்தது. இருந்தாலும் தோனியின் தலைமையின் கீழ் நான் விளையாடியபோது அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அப்போதே அவர் மிகப்பெரிய வீரராக மாறி சாதனைகளையும் நிகழ்த்தி விட்டார்.

தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்குமே அவரின் கண்களைப் பார்த்தால் பயப்படுவார்கள். அவர் சத்தம் போட்டு ஒருபோதும் நான் பார்த்ததில்லை அதுதான் அவருடைய பலம். ஆனால் அவர் கண்களை பார்க்கும்போது நீங்களே பயப்படுவீர்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்