அடுத்த ஐ.பி.எல். சீசனில் தோனி விளையாடுவாரா..? ரெய்னா பதில்

நடப்பு சீசனில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார்.;

Update:2025-04-27 13:02 IST

image courtesy:PTI

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி வெறும் 2 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதனால் நடப்பு சீசனில் சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது.

முன்னதாக கடந்த சீசனில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஒப்படைத்த தோனி சாதாரண வீரராக விளையாடினார். ஆனால் நடப்பு சீசனில் இருந்து காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால் கேப்டன் பொறுப்பு மீண்டும் தோனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது தலைமையிலும் சென்னை அணி வெற்றி பெற முடியாமல் போராடி வருகிறது. இதனையடுத்து எதிர்கால அணியை உருவாக்கும் நோக்கில் சென்னை நிர்வாகம் களமிறங்கியுள்ளது.

இருப்பினும் தற்போது 43 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சீசனோடு ஓய்வு பெறுவார் என்று அனைவரும் நினைத்த வேளையில் அவர் இந்த சீசனிலும் விளையாடி வருகிறார். ஆனால் முன்பு போல் அவரால் அசத்த முடியவில்லை. இதன் காரணமாக நடப்பு சீசனில் பெருமளவில் விமர்சனத்தை சந்துத்து வருகிறார். இதனால் அவர் அடுத்த சீசனில் விளையாடுவது கடினம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவிடம் ரசிகர் ஒருவர் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்று எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ரெய்னா, "தோனி இன்னும் ஒரு ஐ.பி.எல். சீசனில் விளையாடுவார்" என்று கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்