மகளிர் கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
image courtesy: @ICC
image courtesy: @ICC
Published on

புதுடெல்லி,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்கள் பிரிஸ்பேனிலும், 3வது ஆட்டம் பெர்த்திலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஷபாலி வர்மாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அதேசமயம் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஹார்லின் தியோல் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும், இந்த அணியில் விக்கெட் கீப்பர்களாக ரிச்சா கோஷ் மற்றும் யாஷ்டிகா பாடியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்; ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹார்லின் தியோல், யாஷ்டிகா பாடியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேஜல் ஹசப்னிஸ், தீப்தி ஷர்மா, மின்னு மனி, பிரியா மிஷ்ரா, ராதா யாதவ், டைட்டஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேனுகா சிங் தாக்கூர், சைமா தாகோர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com