மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிராக டெல்லி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா பந்துவீச்சை தேர்வு செய்தார்;
நவிமும்பை,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
மும்பை:
அமேலியா கெர், ஜி கமாலினி, நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர், நிக்கோலா கேரி, சஜீவன் சஜனா, அமன்ஜோத் கவுர், பூனம் கெம்னார், திரிவேணி வசிஸ்தா, ஷப்னிம் இஸ்மாயில், சமஸ்கிருதி குப்தா.
டெல்லி:
ஷபாலி வர்மா, லாரா வால்வார்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ், லிசெல் லீ, மரிசானே கப், நிகி பிரசாத், சினெல்லே ஹென்றி, சினே ராணா, மின்னு மணி, ஸ்ரீ சரணி, நந்தனி ஷர்மா