மகளிர் பிரீமியர் லீக்: டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.;
Image Courtesy: @wplt20
பெங்களூரு,
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 11-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி ( 2 வெற்றி, ஒரு தோல்வி ) 3வது இடத்திலும், உ.பி. வாரியர்ஸ் அணி ( 2 வெற்றி, 2 தோல்வி ) 4வது இடத்திலும் உள்ளன.
இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.