பிரேசில் வீரர் நெய்மாருக்கு அறுவை சிகிச்சை
நெய்மார், இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.;
ரியோ டி ஜெனிரோ,
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான 33 வயது நெய்மார் நீண்ட நாட்களாக முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டுவந்தார்.
இந்த நிலையில், நெய்மார் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
சமீப காலமாகவே நெய்மார் தேசிய அணியில் விளையாடவில்லை. இருப்பினும் காயத்தில் இருந்து மீண்டு அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு நெய்மார் நல்ல நிலைக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.