உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வென்ற டெம்பேலே

கடந்த செப்டம்பர் மாதம் சிறந்த வீரருக்குரிய பாலோன் டி ஓர் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.;

Update:2025-12-18 07:45 IST

தோகா,

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) விருது வழங்கும் விழா கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று முன்தினம் இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதில் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்குரிய விருதை பிரான்ஸ் வீரரும், பி.எஸ்.ஜி. கிளப்புக்காக ஆடுபவருமான 28 வயதான உஸ்மன் டெம்பேலே தட்டிச் சென்றார். ரசிகர்கள், ஊடகத்தினர், கேப்டன்கள், தேசிய பயிற்சியாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ஸ்பெயினின் லாமினே யாமல் (39 சதவீதம்), பிரான்சின் கிலியன் எம்பாப்பே (35 சதவீதம்) ஆகியோரை பின்னுக்கு தள்ளி டெம்பேலே 50 சதவீதம் வாக்குகள் பெற்று விருதை வென்றார். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் சிறந்த வீரருக்குரிய பாலோன் டி ஓர் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

உலகின் சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை ஸ்பெயினின் போன்மதி தொடர்ந்து 3-வது முறையாக தனதாக்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்