ரூ.13 ஆயிரம் கோடியை நிராகரித்த மெஸ்ஸி

இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார்.;

Update:2026-01-17 15:17 IST

வாஷிங்டன்,

கிளப் போட்டிகளில் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி விளையாடி வருகிறார்.

இவர் இன்டர் மியாமி அணிக்கு செல்லும் முன்பாக கடந்த 2023ஆம் ஆண்டில் சவுதியின் கிளப் அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டின. ஆனால் மெஸ்ஸி இன்டர் மியாமி அணியில் இணைவதையே விரும்பினார்.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் யூரோக்கள் |(அன்றைய மதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி) தருகிறேன் எனக் கூறியும் அல் இத்திஹாத் அணியில் (சவுதி) இணைய மெஸ்ஸி மறுத்துவிட்டதாக அந்த அணியின் உரிமையாளர் அன்மர் அல் ஹைலி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்