இது தான் என்னுடைய இலக்கு: ரொனால்டோ ஓபன் டாக்
அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.;
ரியாத்,
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நாசர் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து வரலாற்றில் 956 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த நிலையில், 1,000 கோல்கள் அடிப்பதே என்னுடைய இலக்கு என ரொனால்டோ தெரிவித்துள்ளார். நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், காயம் ஏதும் ஏற்படாமல் இருந்தால் நிச்சயம் அதை அடைந்து விடுவேன் எனவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
2026 உலகக் கோப்பையுடன் சர்வேதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவேன் என ரொனால்டோ அறிவித்து இருந்தார். இருப்பினும் கிளப் போட்டிகளில் அல் நாசர் அணிக்காக விளையாடும் ஒப்பந்தத்தை அவர் மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.