ஆக்கி இந்தியா லீக்: ராஞ்சி அணி 3-வது வெற்றி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ் - சூர்மா ஆக்கி கிளப் அணிகள் மோதின.;
கோப்புப்படம்
ராஞ்சி,
8 அணிகள் இடையிலான 7-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் ராஞ்சி ராயல்ஸ் - சூர்மா ஆக்கி கிளப் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராஞ்சி ராயல்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ராஞ்சி அணியில் மன்மீத் சிங் ராய் (14-வது நிமிடம்), டாம் பூன் (20-வது மற்றும் 22-வது நிமிடம்), மன்தீப் சிங் (47-வது நிமிடம்) கோலடித்தனர். சூர்மா அணியில் ஜீத் பால் 52-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். 5-வது ஆட்டத்தில் ஆடிய ராஞ்சி அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சூர்மா கிளப் அணிக்கு 3-வது தோல்வியாகும்.
ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் - ஐதராபாத் டூபான்ஸ் (மாலை 5 மணி), கலிங்கா லான்செர்ஸ் - எஸ்.ஜி.பைப்பர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.