சர்வதேச செஸ் போட்டி: குகேஷ்-பிரக்ஞானந்தா ஆட்டம் டிரா

வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 40-வது நகர்த்தலில் டிரா செய்தார்.;

Update:2026-01-22 06:50 IST

கோப்புப்படம் 

விஜ்க் ஆன் ஜீ,

டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. இதில் 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பிரக்ஞானந்தா - உலக சாம்பியன் குகேஷ் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 40-வது நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். குகேஷ் தொடர்ச்சியாக சந்தித்த 4-வது டிரா இதுவாகும். பிரக்ஞானந்தா 2 டிரா, 2 தோல்வி கண்டுள்ளார்.

அர்ஜூன் எரிகைசி (இந்தியா) - அனிஷ் கிரி (நெதர்லாந்து) இடையிலான ஆட்டம் 80-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் 55-வது நகர்த்தலுக்கு பிறகு அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் நிமானிடம் தோல்வியை தழுவினார்.

4-வது சுற்று முடிவில் ஹான்ஸ் மோக் நிமான், நோடிர்பெக் அப்துசத்தோரோவ் (உஸ்பெகிஸ்தான்) தலா 3 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்