கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள்; காயத்துடனேயே விளையாடி தங்கம் வென்ற பூஜா சிங்

3 வாரங்களில் 1.77 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.;

Update:2025-12-03 06:44 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் 7 நகரங்களில் 2025-ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் மொத்தம் 222 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 4,448 தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.

இதில், ஜெய்ப்பூர் நகரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றவரான பூஜா சிங் கலந்து கொண்டார். அவர் சிறப்பாக விளையாடி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூஜா சிங், 1.77 மீட்டர் உயரம் தாண்டியுள்ளேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காயத்தில் இருந்து சமீபத்திலேயே குணமடைந்து வந்திருக்கிறேன். நான் பயிற்சி பெற்று 3 வாரங்களே ஆகின்றன. இன்னும் காயத்துடனேயே இருக்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்