மலேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

பி.வி.சிந்து, ஜப்பானின் டொயோகோ மியாசகி உடன் மோதினார்.;

Update:2026-01-08 22:13 IST

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது  சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் டொயோகோ மியாசகி உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பிவி சிந்து பி.வி.சிந்து 21-8, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்

நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பி.வி.சிந்து ஜப்பானின் யமாகுச்சி உடன் மோத உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்