மீண்டும் ஊக்கமருந்து பயன்பாடு- தமிழக தடகள வீராங்கனைக்கு 8 ஆண்டுகள் தடை

து டிரோஸ்டானோலான் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.;

Update:2026-01-06 16:06 IST

புதுடெல்லி,

தமிழகத்தின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை எஸ்.தனலட்சுமி ஏற்கனவே ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 3 ஆண்டு தடையை அனுபவித்தார். பின்னர் மீண்டும் களத்திற்கு வந்த அவர் கடந்து ஆண்டு சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகளத்தில் தங்கம் வென்று கவனத்தை ஈர்த்தார்.

அதற்கு முன்பாக அவரிடம் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து சோதனை நடத்திய போது டிரோஸ்டானோலான் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து தேசிய ஊக்கமருந்துதடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரித்தது. 2-வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது. 27 வயதான தனலட்சுமி திருச்சியை சேர்ந்தவர் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்