உலக பிளிட்ஸ் செஸ்: தங்கம் வென்ற கார்ல்சன்..இந்திய வீரருக்கு வெண்கலம்

கார்ல்சன், உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தோரோவுடன் மோதினார் .;

Update:2026-01-01 16:08 IST

தோகா,

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் 2 நாட்கள் நடந்தது. இதில் இறுதி ஆட்டத்தில் நார்வே வீரர் மார்கஸ் கார்ல்சன்,  உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தோரோவுடன் மோதினார் .

இதில் சிறப்பாக விளையாடிய கார்ல்சென், அப்துசத்தோரோவை 62-வது நகர்த்தலில் வீழ்த்தினார்.கார்ல்சென் 2½-1½ என்ற புள்ளி கணக்கில் அப்துசத்தோரோவை வீழ்த்தி 9-வது முறையாக உலக பிளிட்ஸ் செஸ் தொடரில் தங்கம் வென்றார். அவரிடம் தோல்வி அடைந்த அப்துசத்தோரோவ் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்த இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெண்கலப்பதக்கம் வென்றார். ஏற்கனவே அவர் உலக ரேபிட் செஸ் தொடரிலும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்