உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை
இறுதி சுற்று போட்டி தோகாவில் நடந்து வருகிறது.;
தோகா,
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சுருசி சிங் 245.1 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
மற்றொரு இந்திய வீராங்கனை சைன்யம் (243.3 புள்ளி) வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மானு பாக்கர் (179.2 புள்ளி) 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தார்.