ஆஸ்திரேலிய ஓபன்: தமிழக வீராங்கனை தோல்வி
தமிழக வீராங்கனை தியா ரமேஷ், ஜப்பானின் அஜூனா இச்சியோகாவுடன் மோதினார்.;
சிட்னி,
கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதன் ஜூனியர் போட்டியில் சிறுமியர் தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் தமிழக வீராங்கனை தியா ரமேஷ், ஜப்பானின் அஜூனா இச்சியோகாவுடன் மோதினார்.
இதில் 16 வயதான தியா 3-6, 2-6 என்ற நேர் செட்டில் தோற்று பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்தார்.