ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது;

Update:2026-01-25 14:51 IST

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது  இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில்

நோவக் ஜோகோவிச் (செர்பியா), நெதர்லாந்தின் போடிக் வான் டி ஜான்ட் ஷூல்ப்பை சந்தித்தார்.இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 4-வது சுற்றை எட்டினார்.ஜோகோவிச் ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெற்ற 400-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்