ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஜெசிகா பெகுலா, ரஷிய வீராங்கனை செலக்மெதேவ் மோதினர்.;
மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலா, ரஷிய வீராங்கனை ஒக்ஸானா செலக்மெதேவ் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 6-3,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.