மும்பை

கடலில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் மாயம்; தேடும் பணி தீவிரம்

மும்பையில் கடலில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

மும்பை, 

மும்பையில் கடலில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கடலில் படகு கவிழ்ந்தது

மும்பையை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் நேற்று முன்தினம் இரவு மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். இரவு 9 மணியளவில் அவர்கள் வெர்சோவா காவ் பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் கடலுக்குள் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ராட்சத அலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த மீனவர்கள் 3 பேரும் கடலில் மூழ்கினர். இதில் விஜய் பாமனியா(வயது35) என்ற மீனவர் மட்டும் நீந்தி கரைக்கு வந்தடைந்தார். மற்ற 2 மீனவர்களும் மாயமானார்கள்.

2 பேர் மாயம்

இது தொடர்பாக மும்பை மாநகராட்சி, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மும்பை மாநகராட்சி மீட்பு படையினர், கடற்படையினர் உதவியுடன் படகு கவிழ்ந்து மாயமான 2 மீனவர்களையும் தேடி வருகின்றனர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. உள்ளூர் மீனவர்களும் படகுகளில் கடலில் மூழ்கிய 2 பேரை தேடிவருகின்றனர். படகு கவிழ்ந்து மாயமான மீனவர்கள் பெயர் உஸ்மானி பந்தாரி (22), வினோத் கோயல்(45) என்பது தெரியவந்து உள்ளது. படகு கவிழ்ந்து 2 பேர் மாயமான சம்பவம் மும்பை மீனவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.