வசாய்,
பால்கர் மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான அதிபர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு வனத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த வனத்துறை அதிகாரிகள் 2 பேர் கட்டுமான அதிபரிடம் ரூ.10 ஆயிரம் மற்றும் லஞ்சமாக மது பாட்டிலை கேட்டு உள்ளனர். இதுகுறித்து கட்டுமான அதிபர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் யோசனைப்படி மதுபான பாட்டிலுடன் சென்ற கட்டுமான அதிபர் சம்பந்தப்பட்ட வன அதிகாரியை சந்தித்து கொடுத்தார். அப்போது அந்த அதிகாரி லஞ்சஒழிப்பு போலீசாரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.
இதில் தொடர்புடைய மற்றொரு அதிகாரியையும் லஞ்சஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.