மும்பை

தாராவியில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 33 ஆயிரம் சதுர அடி நிலம் ஒப்படைப்பு

தாராவியில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 33 ஆயிரம் சதுர அடி நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மும்பை, 

தாராவியில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 33 ஆயிரம் சதுர அடி நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிலம் ஒப்படைப்பு

மும்பையில் கெலபா முதல் சீப்ஸ் வரை 33 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில்-3 திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில் தாராவி டி-ஜங்ஷன் பகுதியில் தாராவி மெட்ரோ ரெயில் நிலையம், துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் மெட்ரோ ரெயில் நிலைய பணிகளுக்காக டி-ஜங்ஷன் பகுதியில் உள்ள 33 ஆயிரம் சதுர அடி நிலம் அதிகாரப்பூர்வமாக மும்பை மெட்ரோ ரெயில் நிலைய கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மந்திரி சபை ஒப்புதல்

நிலத்தை ஒப்படைக்க மாநில மந்தி சபை ஒப்புதல் அளித்து உள்ளது. இதுகுறித்து மும்பை மெட்ரோ ரெயில் கழக இயக்குனர் ரமணா கூறுகையில், " துணை மின் நிலையம் மற்றும் பல பணிகள் அந்த நிலத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே அந்த நிலம் எங்கள் கட்டுபாட்டில் தான் இருந்தது. நிலம் அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு கிடைக்க மந்திரி சபை ஒப்புதல் அவசியமாக இருந்தது. தற்போது மந்திரி சபை நிலத்தை ஒப்படைக்க ஒப்புதல் அளித்து உள்ளது " என்றார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்