புதுச்சேரி

தூக்குப்போட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை

கோட்டக்குப்பம் அருகே தாயார் திட்டியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கோட்டக்குப்பம்

கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். அவரது மனைவி உமையாள். இவர்களது மகன் கோபி (வயது 23). பி.எஸ்சி முடித்து விட்டு சென்னையில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக கடந்த மாதம் கீழ்புத்துப்பட்டு வந்த அவர் செலவுக்காக தனது தாயாரிடம் பணம் கேட்டுள்ளார்.

அப்போது தாயார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோபி யாரிடமும் பேசாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். நேற்று நள்ளிரவில் வீட்டின் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து