புதுச்சேரி
புதுவையில் வைரஸ் காய்ச்சலால் சிறுவர்கள் பாதிப்படைந்து வரும் நிலையில் இன்று அரசு ஆஸ்பத்திரிகளில் 406 சிறுவர்கள் சிகிச்சை பெற்றனர். அதில் 20 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களை சேர்த்து மொத்தம் 90 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
40 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் புதிதாக தற்போது ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 844 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 38 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்று 37 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 3 பேர், வீடுகளில் 173 பேர் என 176 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முதல் தவணை தடுப்பூசியை 22 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 325 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 532 பேரும் செலுத்திக்கொண்டனர்.