Branded Feature

'தென்காசிக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது’ திமுக வேட்பாளர் கலை கதிரவனை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரம்

தென்காசி,

தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவனை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரம் செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தென்காசி தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் கலை கதிரவன் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவரை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று பாவூர்சத்திரம், திப்பனம்பட்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

தென்காசி தொகுதி வேட்பாளர் கலை கதிரவன் சாதாரண குடும்பத்தில் இருந்து வரவில்லை. அவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தோடு 50 ஆண்டுகால உறவோடு ஒட்டி இருக்கக்கூடிய கலை என்பவரின் மகனாகவும், தளபதியின் தம்பியாகவும், தென்காசி தொகுதி வேட்பாளராகவும் வந்திருக்கின்றார்.

டாக்டர் கலை கதிரவனை தென்காசி வேட்பாளராக அறிவித்ததும் தென்காசிக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. நான் திருச்செந்தூர் தொகுதியில் 2001-ம் ஆண்டு போட்டியிட்டபோது இவர் வெற்றிபெற்று மதுரைக்கு சென்று விடுவார் என்றும், இங்கே வரமாட்டார் என்றும் அங்குள்ளவர்கள் சொன்னார்கள்.

ஆனால் 30 ஆண்டு காலமாக தொடர்ந்து 6 முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்று மக்களோடு மக்களாக இருக்கிறேன். இவர் எப்பொழுது போவார் என்று சொல்லும் அளவிற்கு களம் மாறி இருக்கிறது. அதே நிலையை தான் கலை கதிரவன் எடுப்பார் என்றும் சொல்லிக்கொள்கிறேன்.

தென்காசி தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொண்டு சென்று உடனடியாக நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் கலை கதிரவன் செயல்படுவார்.

தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். கலை கதிரனை உதயசூரியன் தினத்தில் வாக்களித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும்' என்றார்.

பிரசாரத்தின்போது அவருடன், தென்காசி தொகுதி திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன், கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி, கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கே.பி.குமார்பாண்டியன் மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாவூர்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு சுரண்டை பகுதிக்கு சென்று பிரசாரம் மேற்கொள்ள சென்ற அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சுரண்டையில் திமுக நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சுரண்டை பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சுரண்டை நகர் பகுதியில் டாக்டர் கலை கதிரவனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த பரப்புரையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனி நாடார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.