சென்னை,
ஏ.ஐ. மற்றும் டேட்டா சயின்ஸ் கல்வியை அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய டீச்அகாடெமி – ஐ.ஐ.டி. பாட்னா விஸ்லேஷன் ஐ-ஹப் அறக்கட்டளை கூட்டணி அமைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் டேட்டா சயின்ஸ் கல்வியை கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் பணிபுரியும் தொழில் நிபுணர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்ய டீச்அகாடெமி நிறுவனம், ஐ.ஐ.டி. பாட்னாவின் விஸ்லேஷன் ஐ-ஹப் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்பட உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, மக்கள் பணிபுரியும் விதம், கற்கும் முறை மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அணுகுமுறை ஆகியவற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளில் ஏ.ஐ. மற்றும் டேட்டா சயின்ஸ் தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், இவற்றைக் கற்றுக்கொள்வதில் மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இருப்பினும், எங்கிருந்து கற்றலைத் தொடங்குவது, என்னென்ன திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும், அவற்றை நிஜ வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பலருக்கும் சவாலாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, டீச்அகாடெமி மற்றும் ஐ.ஐ.டி. பாட்னாவின் விஸ்லேஷன் ஐ-ஹப் அறக்கட்டளை இணைந்து, தொழில்நுட்பக் கல்வியில் நடைமுறைப் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றன.
தொழில்நுட்பக் கருத்துகளைப் புரிந்துகொள்வது மட்டுமின்றி, அவற்றை நிஜ உலகச் சூழல்களில் பயன்படுத்தும் திறனையும் வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம், கற்றலின் வாயிலாக தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தவும், அவற்றின் பயன்பாடுகளை அறிந்துகொள்ளவும் மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கல்லூரி மாணவர்கள் தங்களது கல்வியுடன் இணைந்து ஏ.ஐ. மற்றும் டேட்டா சயின்ஸ் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள இந்தக் கூட்டணி உதவும். புதிய பட்டதாரிகள் தங்களது ஏற்கனவே உள்ள அறிவை மேம்படுத்தி, பணிச்சூழலில் இத்தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதேபோல், பணிபுரியும் தொழில் நிபுணர்கள் தங்களது தொழில்நுட்பத் திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கல்வி அல்லது தொழில்முறை பின்னணியைப் பொருட்படுத்தாமல், வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்கும் பயனுள்ள வகையில் இக்கல்வித் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
டீச்அகாடமி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரமணியம் கூறும்போது, “ஐ.ஐ.டி. பாட்னாவின் விஸ்லேஷன் ஐ-ஹப் அறக்கட்டளையுடனான எங்களது கூட்டணி, தரமான ஏ.ஐ. மற்றும் டேட்டா சயின்ஸ் கல்வியை நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான ஒரு தேசிய அளவிலான முயற்சியின் தொடக்கமாகும்.
இது ஆரம்பம் மட்டுமே. எதிர்காலத்திற்குத் தயாரான இந்தியாவின் திறமையான பணியாளர்களை உருவாக்கும் நோக்கில், ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் புதுமை மையங்களை நிறுவுவதற்கான பணிகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
ஆரம்பத்திலேயே கற்றலைத் தொடங்கும் ஒவ்வொரு மாணவரும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களைப் பெற்று, போட்டி நிறைந்த சூழலில் முன்னிலை பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார்.
ஐ.ஐ.டி. பாட்னாவின் விஸ்லேஷன் ஐ-ஹப் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சாய் கிரண் ஒர்ஹண்டி கூறும்போது, “தொழில்நுட்பத் திறன் கொண்ட நிபுணர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் தேவைக்கும், தற்போதுள்ள திறன்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே எங்களது முக்கிய நோக்கமாகும்.
டீச்அகாடெமியுடனான இந்தக் கூட்டணி மூலம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழில்முறை கல்வி தொடர்பான எங்களது செயல்பாடுகளை இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில்நிபுணர்களிடம் கொண்டு செல்கிறோம்.
இந்தக் கல்வித் திட்டங்கள் முறையாக வடிவமைக்கப்பட்டவை, நடைமுறைப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் நம்பகமான கல்வி நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுபவை.
மேலும், தொழில்துறைக்கு தேவையான கல்வியை கற்க ஆர்வமுள்ள அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் இத்திட்டங்களை விரிவுபடுத்த உறுதியாக உள்ளோம்” என்றார்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் அன்றாட வணிகம் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளில் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், கல்லூரிக் கல்வியுடன் மட்டுமின்றி, ஒருவரின் தொழில் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் தொடர்ந்து கற்றுக்கொள்வது அவசியமாகியுள்ளது.
இந்தக் கூட்டணியின் மூலம், ஏ.ஐ. மற்றும் டேட்டா சயின்ஸ் கல்வியில் நடைமுறை சார்ந்த அணுகுமுறையை வழங்கி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்ளவும், தொழில் வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை மேம்படுத்தவும் கற்றவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துவதே டீச்அகாடெமி மற்றும் ஐ.ஐ.டி. பாட்னாவின் விஸ்லேஷன் ஐ-ஹப் அறக்கட்டளையின் நோக்கமாகும்.
விவரம் அறிய...
கல்வித் திட்டம் தொடர்பான இணைப்பு: