சொந்த வீட்டை அழகாக மாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். குறிப்பாக வீட்டுக்கு புதிதாக பெயிண்ட் அடிக்கும்போது, நமக்குப் பிடித்த வண்ணங்களைத் தேர்வு செய்து வீட்டின் தோற்றத்தையே புதிதாக மாற்றிவிடலாம். ஆனால், பெயிண்டிங் வேலை என்று வந்துவிட்டால் வண்ணத்தைத் தேர்வு செய்வதுடன் மட்டும் வேலை முடிந்துவிடுவதில்லை.
எந்த நிறம் வீட்டுக்குப் பொருத்தமாக இருக்கும்? எந்த வகையான பெயிண்ட் பயன்படுத்த வேண்டும்? நம்பகமான பெயிண்டர்கள் கிடைப்பார்களா? சொன்ன நேரத்தில் வேலையை முடிப்பார்களா? வேலை நடக்கும் நாட்களில் வீட்டை எப்படி நிர்வகிப்பது? என இப்படி அடுக்கடுக்காக பல கேள்விகள் எழலாம்.
இந்த சிரமங்களைக் குறைத்து, வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் முழுப் பணியையும் ஒரே இடத்தில் எளிதாக மேற்கொள்ள உதவும் வகையில் Asian Paints Beautiful Homes Painting Service (BHPS) உருவாக்கப்பட்டிருக்கிறது.
Beautiful Homes Painting Service என்பது வெறுமனே வீட்டுக்கு பெயிண்ட் அடித்துக் கொடுக்கும் சேவை மட்டுமல்ல. வீட்டின் தேவையைப் புரிந்துகொள்வதில் தொடங்கி, சரியான நிறம் மற்றும் தயாரிப்புகளைத் தேர்வு செய்வது, பெயிண்டிங் பணிகளைத் திட்டமிடுவது, திறமையான பெயிண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்வது, அவற்றைக் கண்காணிப்பது என முழுமையான painting solution-ஐ வழங்கும் வகையில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் எந்த நிறம் பொருத்தமாக இருக்கும் என்பதில் குழப்பம் இருந்தால், அதற்கான personalised colour consultation கிடைக்கிறது. அதேபோல் சுவர்களின் தன்மை மற்றும் வீட்டின் தேவைக்கு ஏற்ப எந்த வகையான product பயன்படுத்துவது என்பதற்கான நிபுணர்களின் பரிந்துரைகளையும் பெறலாம்.
இதனால் பல்வேறு நபர்களை தனித்தனியாக அணுக வேண்டிய சிரமம் குறைந்து, வீட்டின் painting project-ஐ ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ள முடியும்.
வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும்போது பலருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சினை, தினமும் பெயிண்டர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளிப்பதும், அந்தப் பணிகள் சரியாக நடக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிப்பதும்தான்.
Beautiful Homes Painting Service-ல் ஒவ்வொரு project-க்கும் Dedicated Supervisor இருப்பது உங்களின் இந்த சுமையை எளிதாக்குகிறது.
பெயிண்டிங் வேலைகளை ஒருங்கிணைப்பது, வேலை திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பது மற்றும் project தொடர்பான தேவைகளை நிர்வகிப்பது போன்றவற்றில் supervisor முக்கியப் பங்கு வகிக்கிறார். இதனால் வீட்டு உரிமையாளர்கள் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவை குறைகிறது.
வீட்டில் பெயிண்டிங் வேலை தொடங்கிய பிறகு, அது திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நீடிப்பது குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையையே பாதிக்கக்கூடும். பர்னிச்சர்களை பாதுகாப்பாக இடம் மாற்றி வைப்பது, அறைகளை பயன்படுத்த முடியாமல் இருப்பது, தூசி மற்றும் பொருட்களை நிர்வகிப்பது என பல நடைமுறை சிரமங்கள் ஏற்படலாம்.
இதனால்தான் On-Time Painting என்பது Beautiful Homes Painting Service-ன் முக்கிய அம்சங்களில் ஒன்றாக வலியுறுத்தப்படுகிறது.
திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்வதை மையமாகக் கொண்டு project management மேற்கொள்ளப்படுவதால், வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயிண்டிங் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவதற்கும் வசதியாகிறது.
சேவையின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் 20% Money-Back Guarantee. குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உறுதியளிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பெயிண்டிங் வேலைகள் முடிக்கப்படாத சூழலில் 20% பணம் திரும்ப வழங்கப்படும் என்கிற உத்தரவாதம்.
பெயிண்டிங் பணிகளில் காலக்கெடு என்பது முக்கியமான கவலையாக இருக்கும் நிலையில், இந்த உத்தரவாதம் சேவையின் சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பதை உறுதி செய்கிறது.
பெயிண்டிங் வேலையைத் தொடங்குவதற்கு முன்னர் பலருக்கும் கடினமான விஷயம் நிறத்தைத் தேர்வு செய்வதுதான். கடையில் பார்க்கும்போது அழகாகத் தெரியும் ஒரு வண்ணம், வீட்டின் சுவரில் பயன்படுத்தும்போது வேறுபட்டுத் தோன்றலாம். அறையின் அளவு, இயற்கை வெளிச்சம், பர்னிச்சர் நிறம், ஃப்ளோரிங் மற்றும் வீட்டின் ஒட்டுமொத்தமான இன்டீரியர் தீம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு நிறங்களைத் தேர்வு செய்வது நல்லது.
வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பது ஒரு பெரிய வேலை போல தோன்றுவதற்கு முக்கியக் காரணம் அதில் உள்ள பல்வேறு பணிகளை வீட்டு உரிமையாளர்களே தான் ஒருங்கிணைக்க வேண்டியிருப்பது.
Beautiful Homes Painting Service இந்த முழு வேலையையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது.
நிறங்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனை, தயாரிப்புப் பரிந்துரை, திறமையான பெயிண்டர்கள், திட்டமிட்ட மேற்பார்வை, திட்ட மேலாண்மை மற்றும் குறித்த நேரத்தில் முடித்தல் போன்ற அம்சங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பெயிண்டிங் வேலையை முடிந்தவரை எளிமையாகவும் சிக்கல் இல்லாமலும் மாற்றுவதே இதன் நோக்கம்.
இதனால் வீட்டு உரிமையாளர்கள் பெயிண்டிங் பணிகளை நிர்வகிப்பதில் செலவிடும் நேரத்தையும் சிரமத்தையும் குறைத்து, வீட்டைத் தங்களுக்குப் பிடித்தது போன்று மாற்றுவதில் கவனம் செலுத்த முடியும்.
புதிய வீட்டுக்கு முதன்முறையாக பெயிண்ட் அடிப்பதாக இருந்தாலும் சரி, பல ஆண்டுகளுக்குப் பிறகு பழைய வீட்டை புதுப்பிக்க நினைத்தாலும் சரி, சரியான திட்டமிடல் பெயிண்டிங் அனுபவத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
Asian Paints Beautiful Homes Painting Service மூலம் நிறங்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனை முதல் பெயிண்டிங் வேலைகளை வரை ஒருங்கிணைந்த பெயிண்டிங் சேவையைப் பெறலாம்.
Beautiful Homes Painting Service குறித்து மேலும் அறிய அல்லது பெயிண்டிங் சேவைக்குப் பதிவு செய்ய:
📞 80504 80504
*20% Money-Back Guarantee உள்ளிட்ட சலுகைகள் மற்றும் சேவைகள் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.