Feston ESS பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு (BESS) உற்பத்தி ஆலை திறப்பு விழா 
Branded Feature

தமிழ்நாட்டில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு உற்பத்தி ஆலையை திறந்தது FESTA Group

இந்த முதலீடு மாநிலத்தின் தூய்மையான எரிசக்தித் தொழில்துறை வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கிறது.

FESTA Group தமிழ்நாட்டில் தனது புதிய Feston ESS பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு (BESS) உற்பத்தி ஆலையை சமீபத்தில் திறந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர்-சென்னை தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள புதிய உற்பத்தி ஆலையின் முலம், ஆண்டுக்கு 3 GWh BESS உற்பத்தித் திறனை இலக்காகக் கொண்டு, சூரிய மின்சக்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு உற்பத்தித் தளத்தை FESTA Group விரிவுபடுத்துகிறது.

ஆலையின் திறப்பு விழா, குழுமத்தின் உற்பத்திப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த ஆலை, இந்தியாவின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப நம்பகமான, விரிவாக்கக்கூடிய மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தூய்மையான எரிசக்தி சேமிப்புத் தீர்வுகளை வழங்குவதற்கும், நாட்டின் எரிசக்தி சேமிப்பு உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதற்கும் உதவும்.

2024 ஆம் ஆண்டு சூரிய மின்சக்தி இன்வெர்ட்டர்களை உற்பத்தி செய்வதற்காக Feston S.E.V. நிறுவனத்தைத் தொடங்கிய FESTA Group, தற்போது Feston ESS மூலம் ஜிகாவாட் அளவிலான BESS உற்பத்தித் துறையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் சூரிய மின்சக்தி இன்வெர்ட்டர்கள் மற்றும் எரிசக்தி சேமிப்புத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் உற்பத்தித் தளத்தை உருவாக்குகிறது.

புதிய உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு 3 GWh உற்பத்தித் திறனை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் இதன் உற்பத்தித் திறனை மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்-சென்னை தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலை, பேட்டரி செல்களின் சோதனை, தரப்படுத்துதல் மற்றும் வகைப்படுத்துதல், பேட்டரி மாட்யூல் உற்பத்தி, பேக் அசெம்பிளி, முழுமையான BESS ஒருங்கிணைப்பு, தர உத்தரவாதம் மற்றும் செயல்திறன் சரிபார்ப்பு உள்ளிட்ட உற்பத்திச் செயல்முறைகளை உள்ளடக்கியதாகும்.

ஒருங்கிணைந்த எரிசக்தி உற்பத்திச் சூழலை உருவாக்குதல்

குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் (C&I) மற்றும் பெரிய அளவிலான மின்சக்தித் திட்டங்களுக்குத் தேவையான தீர்வுகளை வழங்கும் வகையில், ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைந்த எரிசக்தி உற்பத்திச் சூழலை உருவாக்குவதே FESTA Group-இன் நோக்கமாகும்.

Feston S.E.V. நிறுவனம் ஆன்-கிரிட் மற்றும் ஹைப்ரிட் சோலார் இன்வெர்ட்டர்களை உற்பத்தி செய்கிறது. அதேவேளையில், Feston ESS நிறுவனம் மேம்பட்ட பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகளின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துகிறது.

சூரிய மின்சக்தி உற்பத்தியையும் நம்பகமான எரிசக்தி சேமிப்பையும் ஒருங்கிணைப்பதன் மூலம், மின்சார விநியோக நம்பகத்தன்மையை மேம்படுத்துதல், மின்சாரச் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு FESTA Group பங்களிக்க இலக்கு கொண்டுள்ளது.

இந்தப் புதிய உற்பத்தி ஆலை, இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'பில்ட் ஃபார் இந்தியா' தொலைநோக்குப் பார்வைக்கான FESTA Group-இன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் தூய்மையான எரிசக்தி உற்பத்தித் தளத்தை வலுப்படுத்துதல்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய மையமாக வளர்ந்து வரும் நிலையில், FESTA Group-இன் இந்த முதலீடு மாநிலத்தின் தூய்மையான எரிசக்தித் தொழில்துறை வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கிறது.

ஸ்ரீபெரும்புதூர்-சென்னை தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலை, நவீன உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை ஒருங்கிணைத்து, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட எரிசக்தி சேமிப்புத் தயாரிப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

இதனுடன், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகத்தை உருவாக்கவும் FESTA Group திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம், உள்நாட்டு உற்பத்தித் திறனை விரிவுபடுத்தி, இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளுக்குச் சேவை வழங்கும் நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

தலைமைத்துவத்தின் தொலைநோக்குப் பார்வை

FESTA Group-இன் தலைமைச் செயல் அதிகாரி திரு. சம்பத் குமார் கூறியதாவது:

"2024 ஆம் ஆண்டு Feston S.E.V. நிறுவனத்தைத் தொடங்கியபோது, ஆன்-கிரிட் மற்றும் ஹைப்ரிட் இன்வெர்ட்டர்கள் உள்ளிட்ட சூரிய மின்சக்தி தொழில்நுட்ப உற்பத்தியில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதே எங்களது முக்கிய நோக்கமாக இருந்தது. குடியிருப்பு, வணிகம், தொழில்துறை மற்றும் பெரிய அளவிலான மின்சக்தித் திட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றியபோது, நம்பகமான எரிசக்தி சேமிப்புத் தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வருவதை உணர்ந்தோம்.

இதன் தொடர்ச்சியாக, Feston ESS-ஐ தனித்துவமான எரிசக்தி சேமிப்புப் பிரிவாக உருவாக்கியுள்ளோம். இந்தியாவின் நடைமுறை எரிசக்தித் தேவைகளுக்கு ஏற்ற, விரிவாக்கக்கூடிய மற்றும் நம்பகமான பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை உருவாக்குவதே எங்களது நோக்கம்.

பேட்டரி மாட்யூல்கள், பேட்டரி பேக்குகள், சோதனை தர உத்தரவாதம் மற்றும் முழுமையான BESS ஒருங்கிணைப்பு உள்ளிட்ட உற்பத்தித் திறன்களை இந்தப் புதிய ஆலை மூலம் மேம்படுத்துகிறோம்.

இந்தியாவின் எரிசக்தித் துறை வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்திற்கு ஏற்ப உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் நம்பகமான எரிசக்தி சேமிப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்கி, பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே எங்களது நீண்டகால இலக்காகும்.

இந்த ஆலை எங்களது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். தரமான தயாரிப்புகள், தொழில்நுட்ப மேம்பாடு, வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் உள்நாட்டு உற்பத்தித் திறன் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்திற்கு எங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம்."

இவ்வாறு அவர் கூறினார்.

FESTA Group-இன் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம்

Feston ESS உற்பத்தி ஆலையின் திறப்பு, FESTA Group-இன் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. ஆண்டுக்கு 3 GWh உற்பத்தித் திறன் என்ற இலக்கு, BESS உற்பத்தித் துறையில் விரிவடைந்து வரும் தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் திருநெல்வேலியில் திட்டமிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகம் ஆகியவற்றின் மூலம், இந்தியாவின் தூய்மையான எரிசக்தி உற்பத்தித் துறையில் தனது பங்களிப்பை விரிவுபடுத்த நிறுவனம் முனைகிறது.

தொடர்ந்து அளித்து வரும் நம்பிக்கை மற்றும் ஆதரவிற்காக வாடிக்கையாளர்கள், வணிகக் கூட்டாளர்கள், ஊழியர்கள், அரசு அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் FESTA Group தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

புதுமையான தொழில்நுட்பங்கள், உள்நாட்டு உற்பத்தி மற்றும் நிலையான எரிசக்தி வளர்ச்சி ஆகியவற்றை முன்னெடுத்து, இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு தொடர்ந்து பங்களிப்பதே நிறுவனத்தின் உறுதிப்பாடாகும்.

SCROLL FOR NEXT