Branded Feature

மெனோபாஸ் மற்றும் எலும்பு இழப்பு

நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், அதாவது சிறு வயதிலிருந்து வளர்ந்து வரும் ஆண்டுகள், பரபரப்பான இளமைப் பருவம் முதல் வயதான நிலை வரை உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த அனைத்து வாழ்க்கை கட்டங்களிலும் எலும்புகள் நமக்கு அமைதியாக ஆதரவளிக்கின்றன. ஆனால் பெண்களுக்கு, மெனோபாஸ் (மாதவிடாய் நின்று விடுதல்) எனப்படும் ஒரு மாற்றம், எலும்பு ஆரோக்கியத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைகிறது.

இந்தக் காலகட்டத்தில்தான், அறிகுறிகளை வெளிக்காட்டாமல், எலும்பு இழப்பு மிக வேகமாக அதிகரிக்கும் வாய்ப்புண்டு. உண்மையில், மெனொபாஸ்-க்கு பிறகு முதல் 5-7 ஆண்டுகளில் 20% வரை எலும்பு அடர்த்தி இழப்பு ஏற்படலாம். எனவே, இதுபற்றி முன்னரே விழிப்புணர்வு பெறுதல் மற்றும் சீராக கால்சியம் உட்வகாள்தலும்1 அவசியமாகிறது. இந்த செயல்பாடு பெரும்பாலும் அமைதியாகவே நிகழ்கிறது; மேலும், இது எப்போதும் தெளிவாக அறிகுறிகளை காட்டாமலும் இருக்கலாம். சில நபர்களுக்கு கால்சியம் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகள் பின்வருமாறு காணப்படலாம்:

· தசைகளில் பலவீனம்

· மூட்டு அசௌகரியம்

· அடிக்கடி ஏற்படும் களைப்பு

· தசைப்பிடிப்பு அல்லது இழுப்பு

· சக்தி குறைவான நிலைகள்

சில ஆய்வுகள் உச்சபட்ச எலும்பு திரள் அடர்த்தியில் (பிஎம்டி) ஏற்படும் 10% அதிகரிப்பு, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படுவதை 13 ஆண்டுகள் தாமதப்படுத்தலாம் என காட்டுகின்றன2,3. இந்த அறிகுறிகளை நாம் எளிதில் கவனிக்கத் தவறி விடுகிறோம். இங்குதான் அசல் சவால் அடங்கியுள்ளது: வாழ்வின் பல்வேறு கட்டங்களில் கால்சியத்தின் தேவைகள் மாறுபடுகின்றன, மேலும் சீரான உட்கொள்தல் இல்லாமையால், காலப்போக்கில் உடலுக்கு நீண்ட கால வலிமை மற்றும் இயக்கத்தன்மையை காலப்போக்கில் பராமரிப்பது கடினமாகிறது.

ஆரம்பத்திலேயே கவனிப்பது ஏன் முக்கியமானது?

ஆரம்பத்திலிருந்தே போதுமான கால்சியம் மற்றும் போதுமான வைட்டமின் டி எடுத்துக் கொள்வது, மெனோபாஸ்-க்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் ஏற்படும் எலும்பு இழப்பைக் குறைப்பதாக மற்றும் மெனோபாஸ் ஏற்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே எலும்பு முறிவு அபாயத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது4.

மெனோபாஸ்க்கு பின்பு ஏற்படும் மாற்றம் என்ன?

மெனோபாஸ் ஏற்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் எலும்பு இழப்பு அதிகரிக்கலாம்; மேலும், மெனோபாஸ்-க்கு பிறகு வரும் முதல் ஐந்து ஆண்டுகளிலும் இது தொடரலாம். மெனோபாஸ் ஏற்பட்ட பின்பு பெண்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 30 மி.கி கால்சியம் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைவதே முதன்மைக் காரணம்7,8.

ஈஸ்ட்ரோஜன் என்பது ஒரு ஹார்மோன். இது கால்சியத்தின் சமநிலை மற்றும் எலும்புகளின் வளர்சிதை மாற்றத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது; மெனோபாஸ் ஏற்பட்ட பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அளவுகள் குறைவாக இருக்கும், இது குடலில் கால்சியம் உறிஞ்சப்படுதலைக் குறைப்பதோடு, சிறுநீர் வழியாகக் கால்சியம் வெளியேறுவதை அதிகரிப்பதற்கு காரணமாகிறது. இதனால் எலும்பு இழப்பு மற்றும் எலும்பு முறிவு அபாயம் அதிகரித்தல் ஏற்படலாம்5.

மேலும், இந்த ஹார்மோன் மாற்றம் காரணமாக, எலும்புத் திசுக்கள் சிதைவடைந்து, கால்சியத்தை எலும்புகளின் உருவாக்கத்திற்குப் பயன்படுத்தாமல் இரத்தத்தில் விடுவிக்கின்றன; இதனால் எலும்புகளின் மறுசீரமைப்பு (பழுது நீக்குதல்) செயலில் ஒரு சமநிலையின்மை ஏற்படுகிறது5. எலும்புகளிலிருந்து கால்சியம் இழப்பு அதிகரிப்பதும், அதன் உறிஞ்சப்படுதல் குறைவதும் சேர்ந்து, காலப்போக்கில் எலும்புகள் எளிதில் உடையும் அபாயத்தை மற்றும் எலும்பு தொடர்பான இதர கோளாறுகளுக்கான அபாயத்தை அதிகரிக்க வைக்கலாம்.

அதோடு கூட, குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவுகளின் காரணமாக கால்சியம் உறிஞ்சப்படுதல் குறைவது மட்டுமல்லாமல், வயது அதிகமாகும்போது அது படிப்படியாகத் தொடர்ந்து குறைவாகி, எலும்புகளில் தேய்மான அபாயத்தை மேலும் அதிகரிக்கலாம்.

மெனோபாஸ்-க்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளில் கால்சியத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்

உடலின் தேவைகள் காலப்போக்கில் மாறிவரும் நிலையில், தினசரி கால்சியம் உட்கொள்தல் முன்பு எப்போதையும் விட அதிக முக்கியமாகிறது. கால்சியம் உடலில் முறையாக உறிஞ்சப்படுவதை மற்றும் போன் மெடபாலிசத்தை உறுதிசெய்யும் வகையில், போதுமான அளவு வைட்டமின் டி3 உடன் சேர்த்து, தினசரி சுமார் 1000 முதல் 1200 மி.கி வரையிலான அளவில் கால்சியத்தை உட்கொள்ளும்படி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்5. எனினும், நவீன உணவுமுறை மற்றும் மாறிவரும் வாழ்க்கைமுறைகள் காரணமாக, தினசரி தேவைப்படும் கால்சியம் அளவை முறையாகப் பூர்த்தி செய்ய இயலாது போகலாம். எனவே, இத்தகைய சூழல்களில், காலப்போக்கில் உடலின் தேவைகளுக்கு ஆதரவு கிடைக்க சமச்சீரான உணவு, உடற்பயிற்சி மற்றும் கால்சியம் மாத்திரைகள் போன்ற இணை உணவுகள் உதவலாம்.

தினசரி கால்சியத் தேவைக்கு ஷெல்கால் 500

பெரியவர்களின் தினசரி கால்சியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் விதத்தில் ஷெல்கால் 500 உருவாக்கப்பட்டுள்ளது. எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவிட குறிப்பாக மெனோபாஸ் ஏற்படும் காலத்திலும் அதற்குப் பின்னரும் பெண்கள் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உட்கொள்வது அவசியமாகும்.

ஷெல்கால்500 எலும்பு வலிமையை மற்றும் தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. பல்லாண்டு கால நம்பகமான பின்னணியைக் கொண்டது மற்றும் இந்தியாவின் நம்பர் 1 டாக்டரால் பரிந்துரைக்கப்படும் கால்சியம்*, ஷெல்கால்500 எலும்புகளின் ஆரோக்கியத்தை தொடர்ந்து பராமரிக்க உதவும் வகையில், அன்றாடச் செயல்களுடன் எளிதாக இணைந்து செயல்படுகிறது.

ஏனெனில் மெனோபாஸ் என்பது மாற்றம் ஏற்படும் ஒரு காலகட்டம் மட்டுமல்ல; அது உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கான ஒரு திருப்பு முனையாகும். எலும்பு ஆரோக்கியத்தை இலக்காகக் கொண்ட உங்கள் பயணத்துக்கு ஆதரவளியுங்கள்; உங்கள் எலும்புகளுக்குப் பாதுகாப்பு மிகவும் தேவைப்படும்போது, அவற்றைப் பாதுகாத்திடுங்கள். தற்போதும் மற்றும் வருங்காலத்திலும், ஷெல்கால் ஸ்ட்ராங் ஆக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்த விளம்பர தகவல் கட்டுரை, மெனோபாஸ் ஏற்பட்ட பின்பு நிகழும் மாற்றங்கள் மற்றும் அவை எலும்பு ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தகவலறிவு முயற்சியாகும். இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்று ஆகாது. எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து இணை உணவுகள் பற்றி தகுதிவாய்ந்த

ஆரோக்கிய நிபுணர்களிடம் ஆலோசனை பெறும்படி இதை படிப்பவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

*கால்சியம் தயாரிப்புகளுக்கான SMSRC Rx ரிசர்ச் தரவு, MAT பிப்ரவரி,2026.

Sources:

1. Ji MX, Yu Q. Primary osteoporosis in postmenopausal women. Chronic Dis Transl Med. 2015 Mar 21;1(1):9-13.

2. Akhiiarova K, Khusainova R, Minniakhmetov I, Mokrysheva N, Tyurin A. Peak Bone Mass Formation: Modern View of the Problem. Biomedicines. 2023; 11(11):2982.

3. Hernandez CJ, Beaupré GS, Carter DR. A theoretical analysis of the relative influences of peak BMD, age-related bone loss and menopause on the development of osteoporosis. Osteoporos Int. 2003 Oct;14(10):843-7.

4. The role of calcium in peri- and postmenopausal women: 2006 position statement of The North American Menopause Society. Menopause 13(6):p 862-877, November 2006.

5. Meeta M. How Much Calcium Does an Indian Postmenopausal Woman Need? J Midlife Health. 2022 Jan-Mar;13(1):9-14.

6. Satyadeep, Kavinder, S. and Rohilla (2008) ‘A Cross Sectional Study On Assessment Of Calcium Deficiency And Problems Associatedwith This In Females Of Mangali Area Of Hisar’, International Journal Dental and Medical Sciences Research, 2(5), pp. 181–185.

7. Nordin BE, Need AG, Morris HA, Horowitz M, Robertson WG. Evidence for a renal calcium leak in postmenopausal women. J Clin Endocrinol Metab. 1991 Feb;72(2):401-7.

8. Meeta M. How Much Calcium Does an Indian Postmenopausal Woman Need? J Midlife Health. 2022 Jan-Mar;13(1):9-14.

9.Sözen T, Özışık L, Başaran NÇ. An overview and management of osteoporosis. Eur J Rheumatol. 2017 Mar;4(1):46-56.