Branded Feature

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க திறன் மேம்பாட்டு பயிற்சி; நெல்லை தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் உறுதி

நெல்லை,

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்வேன் என்று நெல்லை தொகுதி தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் வாக்குறுதி அளித்தார்.

நெல்லை தொகுதியில் தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். வேட்பாளர் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளிக்கின்றனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் மானூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல பாலாமடை, இந்திராநகர், கல்குறிச்சி, கட்டளை, காட்டாம்புளி, வேப்பன்குளம், உதயநேரி, புளியங்கொட்டாரம், காந்திநகர், காமராஜர்நகர், தென்கலம் புதூர், ராமச்சந்திரபுரம், பாப்பையாபுரம், பதினாலாம்பேரி, சண்முகாபுரம், குப்புக்குறிச்சி மேலூர், கீழூர், நல்லமாள்புரம், வேப்பன்குளம், நான்காம்குளம் பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் பேசியதாவது:-

தவெக தலைவர் தளபதி விஜய் பொதுமக்களுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். அந்த வாக்குறுதிகள் அனைத்தும் தவெக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றி தரப்படும். தளபதி விஜய் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தீவிரமாக பாடுபட்டு வருகிறார். பாலாமடை பகுதியில் சாமந்திப்பூ விவசாயம் செய்பவர்களின் நலன்கள் காக்கப்படும். அவர்களுக்கு மானிய விலையில் தரமான விதைகள் சொட்டுநீர் பாசன வசதி, குளிர் பதனக்கிடங்கு அமைத்து தர பாடுபடுவேன்.

பாலாமடை பகுதியில் இருந்து கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பலர் வேலைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு கூடுதலாக வேலைகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். பீடி சுற்றும் பெண்கள் நலனைக் காக்க பாடுபடுவேன். மளிகை கடைகள், டீக்கடைகள், சிறிய அளவிலான ஆலைகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவேன். கால்நடைகள் வளர்ப்போருக்கு இங்கு உற்பத்தியாகும் பாலை கூட்டுறவு சங்கங்களுக்கும் நகர பகுதிகளுக்கும் விநியோகிகம் செய்ய பாடுபடுவேன். தென்கலம் பகுதியில் பொது மேய்ச்சல் நிலங்கள் மற்றும் விளைநிலங்களை தனியார் நிறுவனங்கள் அபகரிப்பதை தடுத்து மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்குவேன்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். சாதிய வேறுபாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் மோதல்களை தடுத்து அமைதி ஏற்பட பாடுபடுவேன். தென்கலம், பாலாமடை பகுதிகளில் கிராமப்புறபெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சமூக ரீதியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன். பெண்களுக்கு சிறுசேமிப்பு மற்றும் வங்கி கடன் மூலம் சிறு தொழில்களான தையல், கால்நடை வளர்ப்பு, பூ வியாபாரம் செய்ய உதவுவேன்.

கல்வி இடைநிற்றல் இளம் வயதில் திருமணம் போன்ற பிரச்சினைகளை தீர்ப்பேன். கணவரை இழந்த மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக தையல் இயந்திரம் மற்றும் சிறப்பு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுப்பேன். 10, 12 மற்றும் கல்லூரி முடிக்கும் மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., வங்கி தேர்வுகள், காவலர் தேர்வுகளுக்கு தயாராக இலவச பயிற்சி வகுப்பு, நூலகம் அமைத்து தருவேன்.

வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் வகையில், இளைஞர்களுக்கு கணினி, எலக்ட்ரிக்கல் போன்ற குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு செய்வேன். புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு மானியத் திட்டங்களை வழங்கி வாழ்க்கை தரம் உயர பாடுபடுவேன். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்று தருவேன். விளையாட்டு உபகரணங்கள் மைதான வசதிகளை ஏற்படுத்தி தருவேன். போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மனநல மேம்பாடு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்துவேன். முதியவர்களுக்கு அரசு உதவித்தொகை பெற உதவுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.