29

அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர்

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 61 வது திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.

சென்னை,

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து 3 வது முறையாக இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். இது அஜித் நடிக்கும் 61 வது திரைப்படம். இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படம் அதிரடி திகில் கதையம்சத்தில் தயாராக இருப்பதாகவும், இதில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு வேடம் வில்லத்தனமான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் காதில் கடுக்கன், பெரிய கண்ணாடி, நீளமான தாடி, கோட் சூட் என வித்தியாசமான லுக்கில் அஜித் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அந்த கெட்டப்பில் தான் அஜித் அடுத்த படத்தில் தோன்ற உள்ளார் என தகவல் பரவியது.

இந்த நிலையில் அடுத்த படத்திற்கான அஜித்தின் லுக்கின் நெகட்டிவ் புகைப்படம் ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT