தலைப்புச் செய்திகள்

ஜனநாயக புரட்சியை நிகழ்த்திக்காட்டியவர் அண்ணா; ஆதவ் அர்ஜுனா புகழாரம்

சாமானியர்களுக்கான ஆட்சியை, மக்கள் துணையோடு வென்றெடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

'மக்களிடம் செல், அவர்களிடம் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்..' என்று ஜனநாயகத்தின் அடிப்படையை சொல்லித்தந்த மாபெரும் தலைவர். கொள்கை அரசியலையும் மக்களுக்கான நடைமுறை தீர்வுகளையும் கற்றுத் தேர்ந்து,

'இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சியும் மாநிலத்தில் ஆட்சியை அமைக்கலாம், ஒரு சாமானிய மனிதனும் அதிகாரத்தை அடையலாம்' என்ற ஜனநாயக புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர்.

தமிழ்நாட்டின் தலைமகன், மாநில சுயாட்சியின் உரிமை முழக்கம், மக்கள்நல அரசியலின் நாயகர், ஜனநாயக-தேர்தல் அரசியலின் வழிகாட்டி மற்றும் தமிழ்நாடு அரசியலின் நிரந்தர அடையாளம் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று, அவர் புகழைப் போற்றுவோம். அவர் வழியில் மீண்டுமொரு சாமானியர்களுக்கான ஆட்சியை, மக்கள் துணையோடு வென்றெடுப்போம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.