குரு பகவான் 
ஜோதிடபலன்

ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்?

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் 1-ம் வீட்டில் நின்றால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும் என்பது ஜோதிட கணிப்பு.

குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். ஜோதிடத்தில் அதிர்ஷ்டத்திற்கான கிரகம் என்றால் அது குருதான். குரு பகவான் ஒரு மனிதனுக்கு தேவையான பணம், பதவி, பட்டம், புகழ், கல்வி, ஞானம், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் அனைத்தையும் தரக்கூடியவர். தனம், பாக்கியம் மற்றும் லாபம் ஆகிய மூன்று ஸ்தானத்திற்கு உரிய ஜட காரக கிரகமாக விளங்குகிறார் குரு. புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு உயிர் காரக கிரகமாக குரு பகவான் விளக்குகிறார்.

யோகம் தரும் அமைப்பு

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த ஸ்தானத்தை பார்த்தாலும் அல்லது எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து அல்லது பார்வை பெற்று இருந்தாலும் அவை யோகம் தரக்கூடிய அமைப்பாக விளங்குகிறது.

ஜாதகத்தில் குரு பகவான் இருக்கும் இடத்தின் பலன்கள்

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் 1-ம் வீட்டில் நின்றால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும். 2-ல் நின்றால் பேச்சாற்றல், அரசு உத்தியோகம் கிடைக்கும். 3-ல் நின்றால் சகோதர அனுகூலம், உடன்பிறப்பு உதவி கிடைக்கும். 4-ல் நின்றால் தாய் அனுகூலம், வீடு, வாகன யோகம் கிடைக்கும்.

குரு பகவான் 5-ல் நின்றால் புத்திர தோஷம், நீங்கும். 6-ல் நின்றால் போராட்டம் இல்லாத வாழ்வு மலரும். 7-ல் நின்றால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். 8-ல் நின்றால் நீண்ட ஆயுள் உண்டு. 9-ல் நின்றால் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பார். 10-ல் நின்றால் பதவி மாற்றம் உறுதியாகும். 11-ல் நின்றால் செல்வாக்கு, செல்வநிலை உயரும். குரு பகவான் 12-ல் நின்றால் சுபவிரயம், பயணம், பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும்.

SCROLL FOR NEXT