நடராஜர் தரிசனம் 
ஜோதிடம்

ஆனி திருமஞ்சனம் 2026... எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபட வேண்டும்?

ஆனித் திருமஞ்சன நாளில் சிவபெருமானை வழிபடுவது, சகல நன்மைகளையும் மன அமைதியையும் தரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை

தமிழ் ஆண்டின் மூன்றாவது மாதமான ஆனி மாதம், ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். ஆனி மாதம் தேவர்களுக்கு மாலைப்பொழுது என்பதால் சிவ வழிபாட்டிற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

ஆனி மாதத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஆனி திருமஞ்சனம் ஆகும். ஆனி மாதத்தின் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் சிறப்பு அபிஷேகமே ‘ஆனி திருமஞ்சனம்’ ஆகும்.

இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழா, 22-6-2026 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது, சகல நன்மைகளையும் மன அமைதியையும் தரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவ்வகையில் ஒவ்வொரு ராசிக்காரர்களும், ஆனி திருமஞ்சன நாளில் சிவபெருமானை எப்படி வழிபடலாம், அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.

1. மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் ஆனி திருமஞ்சனம் அன்று நடராஜருக்கு சிவப்பு நிற மலர்கள் சூடி வழிபட, வாழ்க்கையில் நல்ல பலன்கள் தேடி வரும். இதுவரை தடைப்பட்ட சுபகாரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும்.

2. ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் ஆனி திருமஞ்சன நாளில் நடராஜருக்கு ரோஜா மாலை அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பணவரவு உயரும், நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.

3. மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் ஆனி திருமஞ்சனம் அன்று விரதம் இருந்து சிவசக்தியை வழிபட, துன்பங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

4. கடகம்:

கடக ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு பச்சை கற்பூரம் அபிஷேகம் செய்து வழிபட, சிறப்பான பலன் உண்டாகும். வருமான வாய்ப்புகள் பெருகும். குல தெய்வ அருளும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும்.

5. சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் ஆனி திருமஞ்சன நாளில் பன்னீர் அபிஷேகம் செய்து, நடராஜரை வழிபட சந்தோஷம் நிலவும். தொழிலில் முன்னேற்றம் மற்றும் கவுரவம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும்.

6. கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் ஆனித் திருமஞ்சன நாளில் அர்ச்சனை செய்து நடராஜரை வழிபட தொழிலில் லாபம், பண வருவாய் அதிகரிக்கும். புதிய மாற்றங்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கவுரவத்தை நிலைநாட்டும் நிகழ்வுகள் நடக்கும்.

7. துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் ஆனி திருமஞ்சனத்தன்று நடராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், உழைப்பிற்கான சன்மானம் உடனே கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் அனுகூலமாகும்.

8. விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் ஆனித் திருமஞ்சனம் அன்று நெய் தீபம் ஏற்றி நடராஜரை வழிபட, குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இதுவரை வாழ்க்கையில் நிலவிய மந்தநிலை மாறும்.

9. தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் நடராஜருக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. இவ்வாறு வழிபடுவதன்மூலம் குடும்பத்தில் நிம்மதி கூடும். வீட்டிலும் வெளியிடத்திலும் செல்வாக்கு புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும்.

10. மகரம்:

மகர ராசிக்காரர்கள் ஆனித் திருமஞ்சனம் அன்று நடராஜருக்கு வஸ்திரம் சாற்றி வழிபட மனவலிமை கூடும். தெளிவாக சிந்தித்து செயல்படும் ஆற்றல் கிடைக்கும். இதன்மூலம் எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும்.

11. கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் ஆனித் திருமஞ்சன நாளில் நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதன்மூலம், செல்வச் செழிப்பு உண்டாகும், சகல சம்பத்துகளும் தேடி வரும். பய உணர்வு அகன்று புதிய தெம்பு, தெளிவு பிறக்கும்.

12. மீனம்:

மீன ராசிக்காரர்கள் ஆனித் திருமஞ்சன நாளில் நடராஜருக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடலாம். நடராஜரை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும். இழுபறியாக கிடந்த விசயங்கள் சாதகமாகும்.