மாத ராசிபலன்

ஏப்ரல் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, விருச்சிகம், துலாம்

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஏப்ரல் மாத பலன்களை பார்ப்போம்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே!

கடுமையான உழைப்பாளி நீங்கள். சுற்றம் சோறுபோடும் என்பதில் நம்பிக்கைக் கொண்டவர்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்கள்:

வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். வேலைச்சுமை குறையும். தொடர்ந்து வரக் கூடிய வேலைகளை அந்த பொழுதில் முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். தேகம் பளிச்சிடும்.

வியாபாரிகள்:

வியாபாரிகளுக்கு அதிகமான விற்பனை கூடி தங்களுக்கு நல்ல லாபத்தை தாங்கள் எதிர்பார்க்கலாம். புதிய பொருள் ஒன்றை தாங்கள் விற்பனை செய்வதற்கு ஆயத்தமாவீர்கள். ஒரு சிலர் கிளைகள் துவங்கவும் செய்வர்.

குடும்பத் தலைவிகள்:

குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். தங்கள் சொல்லிற்கு மதிப்பு உண்டு.குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் சில விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவரது உடல் நலம் மேம்படும். தங்கள் மாதவிடாய் வலி வந்து போகும்.

கலைஞர்கள்:

திரைப்பட தொடர்பில் இருக்கும் வழக்கமாக உள்ள தொடர்புகள் தொடர்ந்து வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.

மாணவர்கள்:

மாணவர்கள் அன்றாட பாடங்களை அன்றன்றே படித்து வந்தால் மட்டுமே தேர்வுகளில் வெற்றி வாகையை சூடலாம். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பது மிகவும் அபத்தமானது.

பரிகாரம்

பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது. முடிந்தால் துளசி மாலையை கொடுப்பதும் நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே!

கனவிலும் மற்றவருக்கு தீங்கு நினையாதவர் நீங்கள். யாருக்கும் உபத்திரவமாக இருக்கமாட்டீர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்கள்:

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் சமாதானமாக செல்வது நல்லது. எவரையும் எளிதாக நினைக்க வேண்டாம் அவர்களிடம் தேவையற்ற பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

வியாபாரிகள்:

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவு செய்வதற்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வர். முதலில் செலவுகள் அதிகமாக இருந்தாலும் தங்களுக்கு இனி வருங்காலத்தில் அது ஒரு அடித்தளமாக அமைந்துவிடும்.

குடும்பத் தலைவிகள்:

குடும்பத்தலைவிகள் சிக்கன நடவடிக்கையை எடுப்பீர்கள். இந்த கால கட்டத்தில் தங்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படும். ஆதலால், செலவு செய்யும் போது தாங்கள் கவனமாகவும் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள்.

கலைஞர்கள்:

கலைஞர்களுக்கு தாங்கள் நினைத்தப்படியே பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். பலப் பல படங்கள் ஒப்பந்தம் ஆகும். படத்திற்காக முன் பணம் கிடைக்கப் பெறும்.

மாணவர்கள்:

பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கெல்லாம் இன்பச் சுற்றுலாக்களுக்காக தங்கள் கல்வி நிறுவனத்திலிருந்து அழைத்துச் செல்வர். தங்களுக்கு நல்ல அனுபவத்தை தரும்.

பரிகாரம்:

முருகருக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே!

முடிந்தால் முடியும் என்றும் இயலாவிட்டால் இல்லை என்றும் சொல்பவர் நீங்கள், யாரையும் காக்க வைப்பது என்பது தங்களுக்கு பிடிக்காத ஒன்று.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்கள்:

சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் உங்கள் உயர் அதிகாரிகளின் பேரன்பையும் மதிப்பையும் பெறுவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் பக்கம் இருந்து அனைத்துவிதத்திலும் தங்களுக்கு உதவியாக இருப்பார்,

வியாபாரிகள்:

கல், மண் மற்றும் இரும்பு வியாபாரிகள் தாங்கள் அதிகமான விற்பனைகளை செய்து நல்ல பணவரவு கிடைக்கும். ஒரு சிலர் பெரிய வீடு என கட்டத்துவங்குவீர்கள்.

குடும்பத் தலைவிகள்:

கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள். வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள்.

கலைஞர்கள்:

புதுமுகக் கலைஞர்களுக்கு தங்களது திறமையினை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். சோர்வு வேண்டாம்.

மாணவர்கள்:

தாங்கள் தங்களின் வகுப்பு மாணவர்களுடன் கைகலப்பு உண்டாக்காமல் அதாவது வம்பு, வழக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் நட்புணர்வுடன் பழகி வர முயலுவது தங்களது அது உங்கள் பெற்றோரின் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.

பரிகாரம்

மஹா லட்சுமி தாயாருக்கு மாலை வேளையில் நெய்விளக்கு ஏற்றவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே!

வாய்வார்த்தைகளால் மட்டும் பேசாமல் உள்மனதிலிருந்து மறைக்காமல் பேசுபவர்கள் நீங்கள். பந்தா பகட்டு என்பது தங்களுக்கு பிடிக்காத ஒன்று.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்கள்:

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். சக ஊழியர்கள் பாராட்டுவர். பயணத்தின் போது சிறுசிறு விபத்துகளை தவிர்க்க கவனம் அவசியம்.

வியாபாரிகள்:

வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். பழைய பிரச்னைகள் தலைதூக்கும்; நிதானம் தேவை. வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும்.

குடும்பத் தலைவிகள்:

வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு நீங்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். உடல் பலம் பெறும்.

கலைஞர்கள்:

கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு தேர்வினைப் பற்றிய அச்சம் தீரும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.

பரிகாரம்

முனீஸ்வரருக்கு செவ்வாய் கிழமை ஊதுபற்றி ஏற்றி வழிபடுவது நல்லது.