ஆகஸ்ட் மாதத்திற்கான சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கான பலன்களை பார்ப்போம்....
தலைமைப் பண்பும் தன்னம்பிக்கையும் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
பதவி உயர்வுக்கான வாய்ப்பு உருவாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களை உயர்த்தும்.
புதிய கிளைகள் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் சாதனைகள் மனநிறைவை அளிக்கும்.
புகழும் வருமானமும் உயரும். புதிய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
உயர்கல்வி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத் துறையிலும் சாதிப்பீர்கள்.
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வழிபட்டு செந்தாமரை மலர் சமர்ப்பிப்பது புகழை அதிகரிக்கும்.
ஒழுக்கமும் பொறுப்புணர்வும் உங்கள் வெற்றிக்கு அடிப்படையாக அமையும். திட்டமிட்ட செயல்பாடுகள் சிறந்த பலனைத் தரும்.
பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவரின் ஆதரவு கிடைக்கும். சேமிப்பு உயரும். புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்
புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். வருமானமும் உயரும். வெளிநாடுகளுக்கு இந்த மாதம் செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு.
போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். மாணவர்கள் நான்கு படிப்பர்.
புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைத் தரும்.
சமநிலையுடன் சிந்தித்து செயல்படும் குணம் கொண்ட நீங்கள், அனைவரின் அன்பையும் எளிதில் பெறுவீர்கள். இந்த மாதம் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் அமையும்.
பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் நம்பிக்கையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு அவற்றை சிறப்பாக நிறைவேற்றி பாராட்டைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனநிறைவைத் தரும்.
வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி பணப்புழக்கம் சீராகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலை தொடர்பான நல்ல செய்திகள் மனமகிழ்ச்சியைத் தரும். வீட்டிற்கு தேவையான வசதிகளை செய்து கொள்வீர்கள்.
புதிய படங்கள், தொடர்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் கிடைக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவும் வருமானமும் உயரும்.
படிப்பில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். உயர்கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும்.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு வெள்ளை மலர் சமர்ப்பித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது செல்வ வளத்தையும் குடும்ப மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
மன உறுதியும் விடாமுயற்சியும் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பலமாகும். இந்த மாதம் எடுத்த முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.
புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் தொழில் வளர்ச்சி அடையும். புதிய முதலீடுகள் லாபகரமாக அமையும். கூட்டுத் தொழிலில் ஒற்றுமை அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமையைத் தரும். சேமிப்பு உயரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
புதிய வாய்ப்புகள் தொடர்ந்து வரும். முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும்.
கல்வியில் முழு கவனம் செலுத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் பயனளிக்கும்.
பௌர்ணமி அன்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டு மஞ்சள் மலர் சமர்ப்பிப்பது கல்வி மற்றும் தொழிலில் முன்னேற்றத்தை அளிக்கும்.