மேஷ ராசி அன்பர்களே!
உங்கள் தனித்தன்மைமிக்க இயல்பான நடவடிக்கைகளால் குடும்பத்தின் பெருமையை கட்டிக் காத்துவர தயங்க மாட்டீர்கள்.
சிறப்புப்பலன்கள்:
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் கேட்ட இடமாற்றம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரியிடம் கவனமாக நடந்து கொள்வது நல்லது. இளம் பெண்களுக்கு விரும்பியவாறு வரண் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
சொந்த தொழில் செய்பவர்களுக்கு இருப்பதை வைத்து தொழிலை மேம்படுத்தவும். தன் கீழ் பணிபுரிபவரிடம் வாய் நிதானம் தேவை.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு பண பற்றாக்குறை ஏற்படும். தங்கள் பிள்ளைகளின் உதவியால் பண பிரச்சினை நீங்கும். சகோதர சகோதரி உறவு மேம்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு சம்பள உயர்வுடன் தாங்கள் எதிர்பார்த்த கம்பெனியிலிருந்து அழைப்பு வரும். கவலை வேண்டாம்.
மாணவர்கள்
மாணவ மணிகளுக்கு தங்கள் கடின உழைப்பினால் நல்ல மதிப்பெண்களை பெறுவர். இரவில் அதிக நேரம் விழிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்:
வியாழக்கிழமை அன்று அருகில் உள்ள முருகப் பகவான் கோவிலுக்கு சென்று சிவப்பு மலர் மாலையை சாத்துவது நல்லது.
ரிஷப ராசி அன்பர்களே!
மற்றவர்களிடம் அன்பு கிடைக்காவிட்டால் அப்படியே செல்பவர் அல்லர் நீங்கள். மாறாக மீண்டும் மீண்டும் அன்பைக் கொடுத்து கொடுத்து உணரவைப்பதுதான் தங்களின் தனிச் சிறப்பு.
சிறப்புப்பலன்கள்:
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். வேலை பளு சற்று அதிகரிக்கும். தங்கள் சக ஊழியர்களின் உதவியால் பங்கிட்டு முடித்து விடுவீர்கள்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகள், சில்லரை மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கும் எதிர்பார்ப்புக்கு மேல் வருவாய் அதிகரிக்கும். அதில் ஒரு பகுதியை எடுத்து வீடுகட்ட ஆரம்பிப்பீர்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு தங்களுடைய சேமிப்பு தொகை அதிகரிக்கும். பணம் தாராளமாக புழங்கும். வீட்டில் உறவினர்களின் வருகை உண்டு. அவர்களால் தங்களுக்கு நன்மையே விளையும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு தாங்கள் நடித்த படம் பல வருடங்களாகியும் வெளிவராமல் இருந்தது அல்லவா அந்த படம் இந்தமாதம் வெளிவரும். அதில் தங்களின் நடிப்புத் திறன் வெளிப்படும்.
மாணவர்களுக்கு
மாணவ மாணவிகள் தங்களது மாணவர்களுக்கு படிப்பில் முழுக் கவனம் தேவை. தேவையற்ற விசயத்தில் கவனம் செலுத்தாமல் தாங்கள் தங்களின் எதிர்காலத்தைப்பற்றி சிந்தித்து அதற்கேற்ப படிக்க துவங்குங்கள்.
பரிகாரம்:
லட்சுமி நரசிம்மருக்கு சனி கிழமை தரிசிப்பது நல்லது. முடிந்தால் துளசி மாலையை கொடுப்பதும் நல்லது.
மிதுன ராசி அன்பர்களே!
நீங்கள் இயற்கையாகவே கற்பூரம் போன்று சட்டென்று புரிந்து கொள்ளும் ஆற்றல் சிறு வயது முதலே பெற்றிருப்பீர்கள். பெரிய சிக்கலான விசயத்தினையும் சாதாரணமாக கையாள்வீர்கள்.
சிறப்புப்பலன்கள்:
உத்யோகஸ்தர்களுக்கு
வேலைக்கு செல்பவர்களுக்கு சக ஊழியர் ஒருவரால் தங்களுக்கு நன்மை உண்டாகும்.
வியாபாரிகளுக்கு
சொந்த தொழில் செய்பவர்களுக்கு இனி முன்னேற்றம்தான். சில்லரை வியாபாரிகள் அதிக முதலீடுகளை செய்வரை தவிர்க்கவும்.
குடும்பத் தலைவிகளுக்கு
தங்கள் கணவருக்கு தேவையானதை அவர்களுக்கு அறியாமல் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். பிரிந்திருந்த தம்பதியர்களிடையே காண வேண்டும் என்ற ஆவல் பெருகும். ஒரு சில ஜோடிகள் மீண்டும் இணைவர்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு அழகுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். திறமையிலும் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்.
மாணவ, மாணவிகளுக்கு
மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போக்கினை தவிர்த்து அரசுத் தேர்வில் கவனம் செலுத்தவும். நல்ல மதிப்பெண்களை பெற கூடா நட்புகளை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் முதுகு வலி வந்து போகும்.
பரிகாரம்:
திங்கட் கிழமை அன்று வழிபாடு வாரகி அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து படைப்பது நல்லது.
கடக ராசி அன்பர்களே!
நீங்கள் நிதானத்தை எப்போதும் கைவிடமாட்டீர்கள். அவசரம் என்பது தங்களுக்கு பிடிக்காத ஒன்று.
சிறப்புப்பலன்கள்:
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு தங்களின் சிறு தொழிலின் முன்னேற்றத்திற்காக அரசு கடன் கிடைக்கும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு பணவரவில் பிரச்சினை இல்லை. தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். இருவரும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பாடுபடுவர்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு தயாரிப்பாளரிடம் மற்றும் இயக்குனரிடமும் எடுத்தெரிந்து பேசாதீர்கள். திருமணம் போன்ற சுபகாரியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வரண் தட்டி தட்டி வந்து போகும்.
மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு தாங்கள் நினைத்த மதிப்பெண்களை வகுப்புத் தேர்வில் பெற்று விடுவர். உடல் நலத்தில் பல்வலி வந்து போகும்.
பரிகாரம்:
திங்கள் கிழமை அன்று மகாலஷ்மிக்கு முல்லை மலர் மாலையை சாத்துவது நல்லது.