தனுசு
தனுசு ராசி அன்பர்களே!
செய்யும் தொழிலே தெய்வம் என்ற தெய்வ வாக்கினை பின்பற்றி வருபவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வேலைக்கு செல்பவர்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. ஒரு சேமிப்பு தொகையாவது போட்டு வைப்பது நல்லது.
வியாபாரிகளுக்கு
சொந்த தொழில் செய்பவர்களுக்கு அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதியதொரு தொழிலை துவங்க அரசு கடன் கிடைக்கும்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு தேக ஆரோக்கியம் சிறப்படையும். கணவரது முழு சம்பளமும் தங்களது கைக்கு வரும். தங்களுடைய குடும்ப நிர்வாகம் மேம்படும். தங்கள் அறிவுரையை கணவர் கேட்டு நடப்பார். இளம் பெண்களுக்கு விரும்பிய வாரே நல்ல துணை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பர். எதிர்பாலினத்தவரிடத்தில் கவனம் தேவை. அதிக பேச்சைக் குறைப்பது நல்லது.
மாணவர்கள்
மாணவர்களுக்கு பகுதி நேர வேலையில் ஈடுபடுவர். பெற்றோர்களுக்கு உதவியும் புரிவர். தனக்கு புரிந்து கொள்ள முடியாத பாடத்தை ஆசிரியரிடம் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்
வியாழக்கிழமை அன்று மஞ்சள் வஸ்திரத்தை குருபகவானுக்கு சாத்தி வருவது தடைகளை உடைக்கச் செய்யும்.
மகரம்
எதுவாக இருந்தாலும் சட்டப்படி செயல்பட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுபவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக தாங்கள் அலுவலகத்தில் கேட்ட முன் பணம் கிடைக்கும். தாங்கள் நினைத்த வேலைகளை முடிப்பீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சம்பள உயர்வுடன் பதவியும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தங்கள் எண்ணம் பலிக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு தங்களுக்கு தொழில் செய்ய புதிய இடம் கிடைக்கும்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்ப தலைவிகளுக்கு பிரிந்திருந்த தம்பதியினர் மீண்டும் இணையக்கூடிய தருணமாக இம்மாதம் அமையும். பண சிக்கல்கள் அகலும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு தங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். தங்கள் படம் நன்றாக ஓடும். ஒரு சிலருக்கு புதிய படத்தில் முன்பதிவு செய்வார்கள். தங்கள் புகழ் பரவும்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு நினைத்ததற்கு மேலாகவே மதிப்பெண்கள் பெறுவீர்கள். முன்பை விட ஞாபகத்திறன் அதிகரிக்கும். வகுப்பு தேர்வில் முதலிடம் பெறுவர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்
வியாழக்கிழமை அன்று ஜீவசமாதிகளுக்கு சென்று மெடிடேஷன் இருப்பது மிக நன்று.
கும்பம்
உழைப்பால் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை மிக்கவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக பெண் ஊழியர்களிடம் தங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு தங்கள் தொழிலில் தொழில்நுட்பத்தை புகுத்துவீர்கள். கணவர் வீட்டு உறவினர் வந்து போவர்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் இருந்து வந்த கடன் பிரச்சினை அகலும். கணவருடைய பேச்சு அர்த்தமுள்ளதாக உணர்வீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். புதிய நபர் உங்களுக்கு சிபாரிசு செய்வர்.
மாணவர்கள்
மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து தானாகவே மற்றவரின் தூண்டுதல் இன்றி படிக்கத் துவங்குவர். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியிடங்களில் உட்கொள்ள வேண்டாம்.
வழிபாடு
லக்ஷ்மி நரசிம்மரை வெள்ளிக்கிழமை தோறும் சென்று வழிபடுவது நல்லது.
மீனம்
மீன ராசி அன்பர்களே!
ஏமாற்றத்திற்கு காரணம் எதிர்பார்ப்பதே என்ற உண்மையை உணர்ந்தவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரியிடம் கவனமாக நடந்து கொள்வது நல்லது. வாய் நிதானம் தேவை.
வியாபாரிகளுக்கு
சொந்த தொழில் செய்பவர்களுக்கு இருப்பதை வைத்து தொழிலை மேம்படுத்தவும்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். தாங்கள் எதிர்பார்த்த கம்பெனியிலிருந்து அழைப்பு வரும்.
மாணவர்கள்
மாணவ மணிகளுக்கு தங்கள் கடின உழைப்பினால் நல்ல மதிப்பெண்களை பெறுவர். இரவில் அதிக நேரம் விழிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்
வியாழக்கிழமை அன்று குரு ஸ்தலமான திருச்செந்தூர் முருகரை மனதார நினைத்துக் கொண்டு காரியங்களை துவங்குங்கள். அல்லது அருகில் உள்ள முருகப் பகவான் கோவிலுக்கு சென்று சிவப்பு மலர் மாலையை சாத்துவது நல்லது.