இன்றைய பஞ்சாங்கம்:-
கிழமை: வெள்ளிக்கிழமை
தமிழ் வருடம்: பரபாவ
தமிழ் மாதம்: சித்திரை
நாள்: 18
ஆங்கில தேதி: 1
மாதம்: மே
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று அதிகாலை 02.41 வரை சித்திரை பின்பு சுவாதி
திதி: இன்று இரவு 11.07 வரை பௌர்ணமி பின்பு பிரதமை
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 09.30 - 10.30
நல்ல நேரம் மாலை: 04.30 - 5.30
ராகு காலம் காலை: 10.30 - 12.00
எமகண்டம் மாலை: 3.00 - 4.30
குளிகை காலை: 07.30 - 9.00
கௌரி நல்ல நேரம் காலை: 12.30 - 1.30
கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: ரேவதி
ராசிபலன்:-
மேஷம்
உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். பொதுபணிகளில் உள்ளவர்கள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். மாணவர்கள் படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
பெண் உத்யோகஸ்தர்களை சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பர். வியாபாரிகள் புதிய கிளைகள் திறப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மிதுனம்
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். காதல் கசக்கும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கடகம்
எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். தேகத்தில் உற்சாகம் வெளிப்படும். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் நாட்டம் ஏற்படும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்
சிம்மம்
வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். வர வேண்டிய பணம் வசூலாகும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பெற்றோரின் கனவு பலிக்கும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். நினைத்த காரியம் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் நலம் சுகம்பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
விருச்சிகம்
உத்யோகத்தில் தாங்கள் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பம் பிரச்சினைகளின்றி சுமுகமாக செல்லும். வியாபாரத்தில் சற்று எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடன் மற்றும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் கூட்டாளிகளால் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
தனுசு
இன்று அரசு வழிகளில் ஆதாயம் உண்டாகும். உங்களது பேச்சாலேயே பிரச்சினை கள் உருவாகும். ஆதலால் எங்கு பேசினாலும் நிதானமாகவும் யோசித்தும் பேசுங்கள். பிள்ளைகளால் நற்பெயரும் கௌரவமும் அதிகமாகும். உடல் நிலையில் அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உடல் ஆரோக்கியம் சீர்படும். பண வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர்.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
கும்பம்
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தேவையில்லாத மனபயம் விலகும். திருமணம் கோலாகரமாக நடக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்
மீனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை