இன்றைய ராசி பலன்

பணப்பற்றாக்குறை விலகும் நாள்... இன்றைய ராசிபலன் - 15.04.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: புதன்கிழமை

தமிழ் வருடம்: பராபவ

தமிழ் மாதம்: சித்திரை

நாள்: 2

ஆங்கில தேதி: 15

மாதம்: ஏப்ரல்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 01.33 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி

திதி: இன்று இரவு 08.55 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம்:அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை:09.30 to 10.30

நல்ல நேரம் மாலை:4.30 to 5.30

ராகு காலம் மாலை:12.00 to 1.30

எமகண்டம் காலை:7.30 to 9.00

குளிகை காலை:10.30 to 12.00

கௌரி நல்ல நேரம் காலை:10.30 to 11.30

கௌரி நல்ல நேரம் மாலை:6.30 to 7.30

சூலம்:வடக்கு

சந்திராஷ்டமம்: மகம், பூரம்

ராசிபலன்:-

மேஷம்

பண வரவு தாமதப்படும். இன்று நினைத்த காரியத்தை முடித்து மகிழ்ச்சியடைவீர்கள். குடும்பத் தலைவர்களுக்கு அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். வியாபாரிகளுக்கு விற்பனை கூடும். உடல் நலத்தில் கை, கால் மூட்டுகளில் வலி தோன்றும். நல்ல இயற்கை வைத்தியரை நாடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்

காதல் கண்சிமிட்டும். பங்குச் சந்தை விலை சற்று அதிகரிக்கும். வீட்டுச் செலவுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும். ஆனாலும், தங்கள் தொழிலில் நல்லதொரு பணத்தொகை வந்து சேரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மாமியார் உடல் நலம் தேறும். பணப்பற்றாக்குறை விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

தம்பதிகளிடத்தில் அன்பு பெருகும். இருவரும் இணைந்து எந்த முடிவாக இருந்தாலும் சேர்ந்து முடிவெடுப்பர். எதிர்காலத்திற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதற்கென்று ஒரு சிறு தொகையை சேமிப்பீர்கள். கணவர் வழி உறவினர்கள் வீட்டிற்கு வந்து செல்வர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

வியாபாரத்தில் உள்ளவர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விரும்பியவாறே கேட்ட இடத்தில் கடன் உதவி கிட்டும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் அதனை தங்கள் சக ஊழியர்களின் உதவியால் முடித்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கன்னி

பணப்பற்றாக்குறை இருக்காது. திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு தாங்கள் கனவு கண்ட மாதிரியே தங்களுக்கு நல்லதொரு துணை கிடைக்கும். பெற்றோர்கள் தங்கள் வளர்ச்சியைப் பார்த்து பூரிப்பர். உடல் நலம் சிறப்பாகும். தேக ஆரோக்கியம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

துலாம்

வியாபாரிகள் வியாபாரத்தை விரிவு செய்வர். கடன் சுமையை எண்ணி கவலைப்பட வேண்டாம். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். ஆதலால், அதில் ஒரு பகுதியை விற்று கடனை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். பொறுமையை கையாளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

எதிர்பாராமல் ஒரு பெரும் தொகை கைக்கு கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தை அடைவீர்கள். குடும்பத் தலைவிகள் தங்கள் உறவினர்களின் வீட்டு விசேஷத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

காதலர்கள் தங்கள் விருப்பப்படி பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும். புதுமண தம்பதிகளிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்து செல்வதும் மௌனத்தை கையாள்வதும் நல்ல புரிதலை உருவாக்கும். உறவினர்கள் வந்து போவர். சகோதர, சகோதரி வழிகளில் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

பணப்புழக்கம் இருக்கும். அதில் ஒரு பகுதியை எடுத்து சேமிக்கத் துவங்குவர். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். பிள்ளைகள் நன்கு படிப்பர். ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். வாகனக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கும்பம்

குடும்பத் தலைவிகளுக்கு வீட்டில் மதிப்பு கூடும். மாணவர்கள் தாங்கள் நினைத்த பாடப்பிரிவில் சேருவதற்காக நல்ல மதிப்பெண்களை பெற முயற்சி செய்வர். அரசியலில் நல்ல பொறுப்பு வழங்கப்படும். தம்பதிகளிடையே சிறு வாக்குவாதங்கள் வந்தால் கூட விட்டுக் கொடுத்து போவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

எதிர்பார்த்த கல்வி நிறுவனங்களில் படிக்க திட்டமிடுவர். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. கூடுமானவரை வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தாயார் வீட்டிற்கு சென்று தாயாருக்கு வேண்டிய உதவிகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்