இன்றைய ராசி பலன்

நினைத்த காரியம் வெற்றி பெறும் நாள்... இன்றைய ராசிபலன் - 14.04.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: செவ்வாய்க்கிழமை

தமிழ் வருடம்: பராபவ

தமிழ் மாதம்: சித்திரை

நாள்: 1

ஆங்கில தேதி: 14

மாதம்: ஏப்ரல்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 01.42 வரை சதயம் பின்பு பூரட்டாதி

திதி: இன்று இரவு 9.55 வரை துவாதசி பின்பு திரயோதசி

யோகம்: மரண யோகம்

நல்ல நேரம் காலை: 07.30 - 08.00

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் பிற்பகல்: 3.00 - 4.30

எமகண்டம் காலை: 9.00 - 10.30

குளிகை காலை: 12.00 - 1.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்

ராசிபலன்:-

மேஷம்

வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உப தொழில் ஒன்றை ஆரம்பிக்க சிறந்ததாகும். வியாபாரத்தில் உள்ளவர்கள் நிரந்தர கம்பெனிகளுக்கு மட்டும் கடனுக்கு பொருட்களை கொடுக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கலைஞர்களுக்கு கிடைக்கும் வாயப்பினை சிறிய கதாபாத்திரம் என்று ஒதுக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம்

திடீர் பயணங்கள் வந்துப் போகும். ஆனால் உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். காதலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் நன்கு படித்து முன்னேறுவர். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மிதுனம்

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். கூடுமானவரை திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கை, கால் வலி வந்துப் போகும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கடகம்

மாணவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டு விட்டால் அதிக மதிப்பெண்களை ஈட்டுவது உறுதியாகும். தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். உடல் நலம் பளிச்சிடும். இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

பணவரவு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். திருமண வாழ்க்கைப் பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

திருமண முயற்சிகள் வெற்றி தரும். அதிக செலவுகள் இருந்தாலும் அதற்கேற்ப வருவாயும் வரும். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

விருச்சிகம்

வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நல்ல உறவுடன் இருப்பர். தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

தனுசு

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் வெளியூர் சென்று தங்கள் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு சுமாரான லாபமே கிடைக்கும். வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

மகரம்

வியாபாரத்தில் உள்ளவர்கள் நிரந்தர கம்பெனிகளுக்கு மட்டும் கடனுக்கு பொருட்களைகொடுக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக செல்லம் கொடுக்காமல் இயல்பு வாழ்க்கையினை புரிய வைக்கவும். படிப்பதற்குண்டான வசதியினை செய்து கொடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்

வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும்.விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். தோல் வியாதிகள் வந்து போகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். எதிர்பார்த்த பணம் வரும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மீனம்

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். கூடுமானவரை திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கை, கால் வலி வந்துப் போகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை