கிழமை: புதன்கிழமை
தமிழ் வருடம்: பராபவ
தமிழ் மாதம்: ஆனி மாதம்
நாள்: 17
ஆங்கில தேதி: 1
மாதம்: ஜூலை
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று காலை 7-37 வரை பூராடம், பின்பு உத்திராடம்
திதி: இன்று காலை 08-01வரை பிரதமை, பின்பு துவிதியை
யோகம்: அமிர்த யோகம்
நல்ல நேரம் காலை: 09-15 – 10-15
நல்ல நேரம் மாலை: 01-45 - 02-45
ராகு காலம் மதியம்: 12-00 - 01-30
எமகண்டம் காலை: 07-30 - 09-00
குளிகை : காலை 10-30 - 12-00
கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45
கௌரி நல்ல நேரம் மாலை: 06.30 - 07.30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: திருவாதிரை
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனநிறைவை தரும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் நல்ல வளர்ச்சி காணப்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி தொடர்பான பேச்சுகள் நடைபெறும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முதலீடுகளில் லாபம் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பர். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். பணவரவு சீராக இருக்கும். உறவினர்களின் வருகையால் இல்லம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி வெற்றி காண்பார்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
உத்யோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். பணவரவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்
பெண்களுக்கு நல்ல வரன் கிட்டும். நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத் தலைவிகள் சேமிப்பினை உயர்த்துவர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல்நலம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு எதிர்பார்த்த நல்ல கமிஷன் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாக அமையும். தொழிலில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான நல்ல செய்தி பெறுவார்கள். மனநிம்மதி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு உள்ளது. பணவரவு சீராக இருக்கும். உடல்நலம் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். சொத்து தொடர்பான காரியங்கள் சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பயணங்கள் லாபம் தரும். விசாவிற்காக காத்திருப்பவனுக்கு நிச்சயம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் வாடிக்கையாளர்கள் கிடைப்பர். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. உடல்நலம் சீராக இருக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நன்மை கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் விவகாரங்கள் சாதகமாக அமையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். பொருளாதார நிலை உயரத் தொடங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு மதிப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்களால் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். உடல்நலம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்