இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் (07.05.2026): பணவரவு நன்றாக இருக்கும்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: வியாழன் கிழமை

தமிழ் வருடம்: பரபாவ

தமிழ் மாதம்: சித்திரை

நாள்: 24

ஆங்கில தேதி: 7

மாதம்: மே

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று மாலை 04-45 வரை பூராடம் பின்பு உத்திராடம்

திதி: இன்று காலை 08-21 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 10-30 to 11-30

நல்ல நேரம்: மாலை 12-30 to 01-30

ராகு காலம்: பிற்பகல் 1-30 to 3-00

எமகண்டம்: காலை 6-30 to 07-30

குளிகை: காலை 09-00 to 10-30

கௌரி நல்ல நேரம்: காலை -

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 07-30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

அக்கம் பக்கத்தினரிடம் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. தொழில் அதிபர்கள் தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். மாணவர்கள் வேற்று மொழியினைக் கற்க ஆர்வம் கொள்வர். தேக ஆரோக்கியம் நன்கு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்

செலவுகளுக்கேற்றபடி பணம் வந்து சேரும். வெகுநாட்களாக பார்க்க வேண்டியவரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். உடல் நலம் பலம் பெறும். மாணவர்கள் தங்கள் விடுமுறையை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்திக்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

எதிரிகள் விலகிப் போவர். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவர். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை. வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் தங்கள் வேலையை நேர்த்தியாக செய்து மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது வேகத்தை குறைப்பது நல்லது. பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். பிள்ளைகள் நன்கு படிப்பர். குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகும். மணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்தவாரே விரும்பிய துணை தேடி வரும். அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . மேலதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

உத்யோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். கலைஞர்கள் தங்கள் படங்களில் வெற்றி காண்பார்கள். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாது. சிறு வியாபாரிகள் லாபம் காண்பர். வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். தம்பதிகளிடத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மகரம்

வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். கூட்டு சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பண வரவு கூடும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவர். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைத்து, உடல் பொலிவினைக் கூட்டும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

மீனம்

பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப் பிரச்சினை இருக்காது. முகத் தோற்றம் பளிச்சிடும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்