இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் (17.07.2026): எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை : வெள்ளிக்கிழமை

தமிழ் வருடம் : பராபவ

தமிழ் மாதம் : ஆடி மாதம்

நாள் : 1

ஆங்கில தேதி : 17

மாதம் : ஜூலை

வருடம் : 2026

நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.04 மணி வரை ஆயில்யம், இரவு 11.24 மகம் பின்னர் பூரம்

திதி : இன்று காலை 10.50 மணி வரை திரிதியை, பின்னர் சதுர்த்தி.

யோகம் : மரண, சித்த யோகம்.

நல்ல நேரம் காலை : 09.15 – 10.15

நல்ல நேரம் மாலை : 04.45 – 05.45

ராகு காலம் : காலை 10.30 – 12.00

எமகண்டம் : பிற்பகல் 03.00 – 04.30

குளிகை : காலை 07.30 – 09.00

கௌரி நல்ல நேரம் காலை : 01.45– 02.45

கௌரி நல்ல நேரம் மாலை : 07.30 – 08.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்.

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

எடுத்த முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். கணவன்–மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். அலுவலகத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

பிள்ளைகளால் பெருமை ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.புதிய அறிமுகங்கள் நன்மை தரும். முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்கலாம்.

உடல்நலம் சீராக இருக்கும்.உணவு விஷயத்தில் அளவுடன் இருப்பது நல்லது. அமைதிக்கு வழிபாடு மிக அவசியம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. போட்டித் தேர்வுகளில் நல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மிதுனம்

இன்று அமைதியும் பொறுமையும் வெற்றியைத் தரும் நாளாக அமையும். தொழிலில் இருந்த தடைகள் படிப்படியாக விலகும்.,வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் அவசரப்படாமல் முடிவு எடுக்கவும்.

பணவரவு சீராக இருக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. கணவன்–மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனை பயனளிக்கும்.

பழைய பிரச்சினைகள் இனிதே முடிவடையும். அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். உணவு மற்றும் ஓய்வில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

சிம்மம்

வீடு மற்றும் வாகனம் தொடர்பான யோசனைகள் கைகூடும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உறவினர்களுடன் நல்லிணக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

புதிய திட்டங்களை தொடங்க ஏற்ற நாள். உடல்நலம் நன்றாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

துலாம்

இன்று மனநிறைவு தரும் நாளாக அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கலாம். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.

பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிளி பச்சை

விருச்சிகம்

பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். கணவன்–மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் நன்மை தரும். உடல்நலம் சீராக இருக்கும். மாணவர்களுக்கு தனது வகுப்பு ஆசிரியரிடம் பாராட்டுதல் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

தொழிலில் புதிய உயர்வுகள் கிடைக்கும். வீடு மாறும் எண்ணம் உருவாகும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

புதிய முதலீடுகள் நன்மை தரும். பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப நிகழ்வுகள் நடைபெறலாம். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

கும்பம்

நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் படைப்பார்கள். விளையாட்டுத் துறையிலும் கல்வி துறையிலும் சாதனைகள் படைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறலாம். கணவன்–மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கொஞ்சம் கவனம் தேவை. நினைத்த நபரை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மனதிற்கு மற்றவை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். தொழிலில் புதிய உயர்வுகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும்.

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நன்மை தரும். பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை