இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் (21.08.2026): பணவரவை அதிகரிக்க புதிய திட்டம் உருவாகும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை : வெள்ளிக்கிழமை

தமிழ் வருடம் : பராபவ

தமிழ் மாதம் : ஆவணி

நாள் : 4

ஆங்கில தேதி : 21

மாதம் : ஆகஸ்ட்

வருடம் : 2026

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.45 மணி வரை அனுஷம், பின்னர் கேட்டை.

திதி : இன்று முழுவதும் நவமி.

யோகம் : சித்த, மரண யோகம்.

நல்ல நேரம் : காலை 09.15 – 10.15 மணி

நல்ல நேரம் : மாலை 04.45 – 05.45 மணி

ராகு காலம் : காலை 10.30 – 12.00 மணி

எமகண்டம் : மாலை 03.00 – 04.30 மணி

குளிகை : காலை 07.30 – 09.00 மணி

கௌரி நல்ல நேரம் : காலை 12.15 – 01.15 மணி

கௌரி நல்ல நேரம் : மாலை 06.30 – 07.30 மணி

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : பரணி, கிருத்திகை

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி அளிப்பதில் கவனம் தேவை.

பயணங்களில் கூடுதல் கவனம் அவசியம். சொத்து ஆவணங்களை சரிபார்க்காமல் கையெழுத்திட வேண்டாம். மனக்குழப்பம் ஏற்பட்டால் தனிமையில் சிறிது நேரம் அமைதியாக இருப்பது நல்லது. இறை வழிபாடு மன அமைதியை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

ரிஷபம்

இன்று துணிச்சலான முயற்சிக்கு தகுந்த களம் அமையும். காலதாமதமான வேலை ஒன்று திடீரென வேகம் பெறும். உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவாகும். பணப்புழக்கத்தில் சிறு தெளிவு பிறக்கும்.

தொழில் சம்பந்தமான சந்திப்பு பயனுள்ளதாக அமையும். உறவினர் ஒருவரின் வருகை மகிழ்ச்சி தரும். பழைய மன கசப்பு பேசித் தீரும் வாய்ப்பு உள்ளது.

தேவையில்லாத போட்டியைத் தவிர்ப்பது நல்லது. உடனடி முடிவை விட ஆராய்ந்து செயல்படுங்கள். மதியத்திற்குப் பிறகு சாதகமான செய்தி வரலாம். இன்று எடுத்த முயற்சிக்கு நாளைய பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

இன்று உங்கள் பேச்சே ஒரு வாய்ப்பை உருவாக்கும். புதிய அறிமுகம் எதிர்காலத்தில் பயனளிக்கும். தொழிலில் எதிர்பாராத தொடர்பு கிடைக்கலாம். பணவரவு வருவதற்கான புதிய வழி தென்படும். அலுவலகத்தில் சிக்கலான பணியை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் சிரிப்பும் கலகலப்பும் அதிகரிக்கும்.

பயணம் தொடர்பான திட்டம் உருவாகலாம். கற்றல் மற்றும் தகவல் சார்ந்த பணிகளில் சிறப்பு உண்டு. ஒருவரின் இனிமையான வார்த்தையை உடனே நம்ப வேண்டாம். மாலை நேரத்தில் மனதிற்கு பிடித்த தகவல் கிடைக்கும். இன்று உங்கள் சாதுர்யம் பல கதவுகளைத் திறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

கடகம்

இன்று மனதில் வைத்திருந்த ஒரு ஆசைக்கு உயிர் கிடைக்கும். குடும்ப உறுப்பினரின் முன்னேற்றம் பெருமை தரும். தொழிலில் பழைய முயற்சிக்கு பலன் தென்படும். பண விஷயத்தில் சிக்கனம் கைகொடுக்கும். பணியிடத்தில் பொறுமையாக நடந்தால் எதிர்ப்பு குறையும்.

நண்பரிடமிருந்து எதிர்பாராத உதவி கிடைக்கும். வீடு தொடர்பான சிறு மாற்றம் செய்யலாம். முக்கியமான ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். மனதில் இருந்த பாரம் குறைந்து தெளிவு பிறக்கும். இன்று குடும்ப ஆதரவு உங்கள் முன்னேற்றத்திற்கு துணை நிற்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

சிம்மம்

இன்று உங்களுக்கான அங்கீகாரம் தாமதமின்றி வரும். தொழிலில் முக்கியமான முடிவை எடுக்கும் சூழல் ஏற்படும். பணியில் உங்கள் செயல்திறன் வெளிப்படும்.

புதிய பொறுப்பு கிடைத்தாலும் அதை சிறப்பாக கையாள்வீர்கள். பணவரவில் எதிர்பார்த்த தொகை வந்து சேரலாம். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். நண்பர்கள் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.

வெளியிடங்களில் உங்கள் பெயர் பேசப்படும். அதிக நம்பிக்கையால் அவசரப்பட வேண்டாம். நீண்டகால இலக்கில் ஒரு படி முன்னேறுவீர்கள். இன்று தலைமைத்துவம் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

கன்னி

இன்று கணக்கிட்டு வைத்த காரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும். வேலையில் சிறு குழப்பம் இருந்தாலும் விரைவில் தெளிவாகும். தொழில் சார்ந்த புதிய தகவல் கிடைக்கும்.

வருமானத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். சேமிப்பை அதிகரிக்க நல்ல யோசனை தோன்றும். குடும்பத்தில் உங்களின் ஆலோசனை மதிக்கப்படும். நண்பர் ஒருவருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உடல் மற்றும் மன ஓய்வுக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். மாலை நேரத்தில் நல்ல சந்திப்பு ஏற்படலாம். இன்று திட்டமிட்ட செயல்பாடு உங்களை முன்னேற்றும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

துலாம்

இன்று சமாளிக்கும் திறமை உங்கள் பெரிய ஆயுதமாக இருக்கும். சிக்கலான பேச்சுவார்த்தையை சாதகமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடக்கும். பண வரவு எதிர்பார்த்ததைவிட சீராக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சந்தர்ப்பம் உருவாகும். நண்பருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகும். அழகு, கலை, வடிவமைப்பு சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு உண்டு. தேவையில்லாத கடன் பேச்சைத் தவிர்க்கவும். மாலை நேரம் மனநிறைவைத் தரும். இன்று சமநிலையான அணுகுமுறை நல்ல முடிவைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

விருச்சிகம்

இன்று மறைந்திருந்த திறமை வெளிப்படும். பணியில் உங்களை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் போட்டியை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும்.,

பண விவகாரத்தில் திடீர் நன்மை கிடைக்கலாம். பழைய பிரச்சினைக்கு நடைமுறை தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் முக்கியமான ஒருவர் உங்களை ஆதரிப்பார். தொலைபேசி வழியாக நல்ல செய்தி வந்து சேரலாம்.

புதிய முயற்சியில் தயக்கத்தை விடுங்கள். கோபத்தில் பேசும் வார்த்தைகள் மட்டும் கவனமாக இருக்கட்டும். உங்கள் உழைப்புக்கான பாராட்டு கிடைக்கும். இன்று எதிர்பாராத திருப்பமே சாதகமானதாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்

தனுசு

இன்று உங்கள் பார்வை விரிவடையும். தொழிலில் புதிய திசையை நோக்கி நகர்வீர்கள். வெளியூர் அல்லது வெளிநாடு தொடர்பான தகவல் கிடைக்கலாம். பணவரவை அதிகரிக்க புதிய திட்டம் உருவாகும். பணியிடத்தில் அதிகாரிகளின் கவனம் உங்கள் மீது விழும். குடும்பத்தில் உற்சாகமான சூழல் நிலவும். மாணவர்களின் முயற்சியில் முன்னேற்றம் தெரியும்.

ஆவணங்கள் தொடர்பான விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். பழைய நண்பர் மீண்டும் தொடர்பு கொள்ளலாம். மாலை நேரத்தில் நல்ல செய்தி கிடைக்கும். இன்று விரிந்த சிந்தனை புதிய வாய்ப்பை உருவாக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மகரம்

இன்று அமைதியாக செய்த உழைப்பு பலன் காட்டும். தொழிலில் மெதுவான முன்னேற்றம் உறுதியான பலனாக மாறும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கலாம்.

பணத்தை கையாள்வதில் தெளிவு தேவைப்படும். பழைய நிலுவை ஒன்று முடிவுக்கு வரும். குடும்பத்தில் மூத்தவரின் ஆலோசனை பயன் தரும். சொத்து தொடர்பான பேச்சு மீண்டும் தொடங்கலாம்.உறவினர்களிடம் அளவான பேச்சு நல்லது.

உங்கள் உழைப்பை யாரும் கவனிக்கவில்லை என்ற எண்ணத்தை விடுங்கள். சரியான நேரத்தில் அங்கீகாரம் வந்து சேரும். இன்று பொறுமை வெற்றிக்கான பாலமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

இன்று வழக்கத்திற்கு மாறான யோசனை பலன் தரும். தொழிலில் புதிய முறையை முயற்சிக்க வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்து கவனிக்கப்படும். வருமானத்தில் சிறிய உயர்வு ஏற்படலாம். நண்பர் ஒருவரின் பரிந்துரை உதவியாக அமையும். குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி ஏற்படும்.

தொலைதூரத் தொடர்பு நல்ல செய்தியைத் தரலாம். புதிய பொருள் வாங்கும் எண்ணம் உருவாகும். அவசரச் செலவை மட்டும் கட்டுப்படுத்துங்கள். மனதில் இருந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். இன்று புதுமை உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

இன்று உங்கள் பொறுமை பலமாக மாறும். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பண விவகாரம் மீண்டும் நகரும். வருமானத்தைப் பெருக்கும் எண்ணம் உருவாகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். பணியிடத்தில் நம்பிக்கைக்குரிய பொறுப்பு ஒப்படைக்கப்படும். வீட்டில் சந்தோஷமான செய்தி பேசப்படும். சொத்து தொடர்பான முயற்சியில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

உறவுகளுக்குள் இருந்த இடைவெளி குறையும்.சிறிய செலவுகள் சேராமல் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் அமைதியான அணுகுமுறை வெற்றியைத் தேடித் தரும். இன்று நிலைத்தன்மை உங்களுக்கு சாதகமான திருப்பமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் நிறம்