இன்றைய ராசி பலன்

எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்! இன்றைய ராசிபலன் - நவம்பர் 21, 2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

ஆங்கில தேதி: நவம்பர் 21

கிழமை: சனிக்கிழமை

தமிழ் வருடம்: பராபவ ஆண்டு

தமிழ் மாதம்: கார்த்திகை

தமிழ் தேதி: 5

நட்சத்திரம்: இன்று அதிகாலை 4.12 மணி வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி நட்சத்திரம்.

திதி: இன்று அதிகாலை 3.01 மணி வரை ஏகாதசி. பின்னர் துவாதசி திதி.

யோகம்: மரண, சித்த யோகம்.

நல்ல நேரம்: காலை 07.45 – 08.45

நல்ல நேரம்: மாலை 12.15 – 01.15

ராகு காலம்: காலை 09.00 – 10.30

எமகண்டம்: மதியம் 01.30 – 03.00

குளிகை: காலை 06.00 – 07.30

கௌரி நல்ல நேரம்:

காலை 09.45 – 10.45

மாலை 09.30 – 10.30

சூலம்: கிழக்கு.

சந்திராஷ்டமம்: உத்திரம்.

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

உங்களுடைய எதிர்கால வளர்ச்சிக்கான சில முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பீர்கள். பணியிடத்தில் எதிர்பாராத பொறுப்பு வந்து சேரலாம். உங்களுடைய செயல்திறன் மற்றவர்களால் கவனிக்கப்படும். தொழில் செய்பவர்கள் புதிய வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் உற்சாகம் உண்டாகும். பண விஷயங்களில் திட்டமிடல் அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு தொடர்பான பேச்சு தொடங்கலாம். பிள்ளைகளின் முன்னேற்றம் மனநிறைவைத் தரும். மாணவர்கள் புதிய பாடங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள். கலைத்துறையினருக்கு புதிய தொடர்புகள் மூலம் வாய்ப்பு கிடைக்கும். உடல் சோர்வைத் தவிர்க்க ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்கச் சிவப்பு.

ரிஷபம்

மறைந்திருந்த சில வாய்ப்புகள் உங்கள் முயற்சியால் வெளிச்சத்திற்கு வரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வர்த்தகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பழைய பணப் பிரச்சினைகளைச் சீர்செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனை வழிகாட்டும். பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் குறையும். மாணவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம் வெண்மை.

மிதுனம்

உங்களுடைய அறிவாற்றலைப் பயன்படுத்தி பல விஷயங்களில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். சக ஊழியர்களுடன் இணைந்து செயல்படுவதால் வேலைகள் விரைவாக முடியும். தொழிலில் எதிர்பாராத வாடிக்கையாளர் வருகை வர்த்தகத்திற்கு உதவியாக இருக்கும். பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். பிள்ளைகளின் சாதனைகள் பெருமை சேர்க்கும். மாணவர்கள் எழுத்துத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய தொடர்புகள் மூலம் வாய்ப்புகள் உருவாகும். பயணங்களில் நிதானம் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை.

கடகம்

உங்களுடைய நீண்டகால எண்ணங்களில் ஒன்றைச் செயல்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அமையும். உத்தியோகத்தில் பணிகளை முடிப்பதில் இருந்த சிரமங்கள் குறையும். தொழிலில் புதிய கூட்டாளிகளுடன் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பணம் தொடர்பான பழைய பிரச்சினைக்கு ஒரு வழி பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான விவாதங்கள் நடைபெறும். வீட்டில் சுப காரியங்கள் குறித்த ஆலோசனை எழலாம். தாய்வழி உறவுகளால் உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் புதிய ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளுக்கு உரிய பாராட்டைப் பெறுவார்கள். மன அமைதிக்காகத் தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: முத்து நிறம்.

சிம்மம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் எந்த விஷயத்திலும் அவசரமாக முடிவெடுக்காமல் சற்று யோசித்து செயல்படுங்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். முக்கிய ஆவணங்களை சரிபார்த்து கையாள்வது அவசியம். தொழிலில் புதிய முதலீடு தொடர்பான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. வியாபாரத்தில் வரவு தாமதமானாலும் நிலைமை கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத செலவு ஒன்று வரலாம். பணத்தை பிறருக்காக செலவிடும் முன் உங்கள் தேவைகளை கவனியுங்கள். குடும்பத்தில் ஒருவரின் பேச்சை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். தம்பதியரிடையே சிறிய கருத்து வேறுபாடு வந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் மனதை அமைதிப்படுத்தி படித்தால் நல்ல பலன் கிடைக்கும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: செவ்வரளி நிறம்.

கன்னி

முக்கியமான விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொண்டு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் நிலுவையில் இருந்த கோப்புகள் மற்றும் பணிகள் முடிவுக்கு வரும். புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணத்தை முதலீடு செய்யும் முன் நன்கு ஆராயுங்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கலாம். வீட்டில் பெண்களின் ஆலோசனை பயனளிக்கும். மாணவர்கள் நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிறிய உடல் உபாதைகளைக் கவனியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு.

துலாம்

நீங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல மாற்றம் இன்று நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கான முயற்சி பலனளிக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதால் சில முக்கியச் செலவுகளைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணைந்து பயனுள்ள முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். மாணவர்கள் தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்வார்கள். கலைஞர்களுக்கு வெளியிடங்களில் பாராட்டு கிடைக்கலாம். உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிஸ்தா பச்சை.

விருச்சிகம்

நினைத்த காரியங்களை நிறைவேற்றுவதில் இருந்த தயக்கங்கள் அகலும். பணியிடத்தில் உங்களுடைய ஆலோசனை ஒரு முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்பு தொடர்பான எதிர்பார்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய பொருட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் விற்பனை வாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிகளை ஆராய்வீர்கள். குடும்பத்தில் உங்களுடைய விருப்பத்திற்கு ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் புதிய பாடங்களை விரைவாகப் புரிந்துகொள்வார்கள். கலைஞர்களுக்கு திறமையை வெளிப்படுத்தும் அரிய சந்தர்ப்பம் கிடைக்கும். உடல்நலத்தில் கவனக்குறைவு வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு.

தனுசு

நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் அனுபவத்தின் பலம் வெளிப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சிறப்பாகச் சமாளிப்பீர்கள். தொழில் செய்பவர்கள் வணிகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சேமிப்பை அதிகரிப்பதில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சந்திப்பு நடைபெறும். வீட்டில் பழுதுபார்ப்பு அல்லது புதுப்பித்தல் பணிகள் குறித்து முடிவெடுப்பீர்கள். மாணவர்கள் விடாமுயற்சியால் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மூட்டு மற்றும் முதுகுப் பகுதிகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.

மகரம்

உங்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் சில நிகழ்வுகள் அமையும். பணியிடத்தில் உங்களுடைய அனுபவத்திற்கு உரிய மதிப்பு கிடைக்கும். பதவி அல்லது பணிமாற்றம் தொடர்பாக நல்ல தகவல் வரலாம். தொழில் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்தி அளித்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபச் செய்தி வந்து சேரலாம். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான சூழல் நிலவும். மாணவர்கள் தேர்வுக்கான தயாரிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு புதிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இறை சிந்தனை மனதிற்கு ஆறுதலைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.

கும்பம்

நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் அனுபவத்தின் பலம் வெளிப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சிறப்பாகச் சமாளிப்பீர்கள். தொழில் செய்பவர்கள் வணிகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சேமிப்பை அதிகரிப்பதில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சந்திப்பு நடைபெறும். வீட்டில் பழுதுபார்ப்பு அல்லது புதுப்பித்தல் பணிகள் குறித்து முடிவெடுப்பீர்கள். மாணவர்கள் விடாமுயற்சியால் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மூட்டு மற்றும் முதுகுப் பகுதிகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா.

மீனம்

புதிய முயற்சிகளுக்கு அடித்தளம் அமைக்கும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைப்பதுடன் சில முக்கியமான பணிகளையும் முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொள்முதல் தொடர்பான முடிவுகள் சாதகமாக அமையும். வருமானத்திற்கேற்ப செலவுகளை அமைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கான திட்டம் நிறைவேறும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிப்பார்கள். கலைஞர்களுக்கு புதிய படைப்புகளுக்கான வாய்ப்பு கிடைக்கும். உணவு முறையில் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்.

SCROLL FOR NEXT