இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் (23.06.2026): இன்று எடுக்கும் முடிவு எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: செவ்வாய் கிழமை

தமிழ் வருடம்: பராபவ

தமிழ் மாதம்: ஆனி மாதம்

நாள்: 9

ஆங்கில தேதி: 23

மாதம்: ஜுன்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று மாலை 04-25 வரை அஸ்தம் பின்பு சித்திரை

திதி: இன்று இரவு 09-03 வரை நவமி பின்பு தசமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 07-30 to 08-30

நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

ராகு காலம்: பிற்பகல் 3-00 to 4-30

எமகண்டம்: காலை 9-00 to 10-30

குளிகை: காலை 12-00 to 1-30

கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30

கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

நீண்ட நாள் காத்திருப்புக்கு நல்ல பதில் கிடைக்கும். உங்களின் செயல்கள் நல்ல பலனை நோக்கி நகரும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.

வெளியூர் பயணம் தள்ளிப் போகும். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். வேலைக்காக அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

ரிஷபம்

உங்கள் முயற்சிகளில் தெளிவான முன்னேற்றம் தெரியும். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நெருக்கமானவர்களின் அன்பு மனநிறைவைத் தரும். திறமைகள் அங்கீகாரம் பெறும்.

பொறுமை பல வெற்றிகளைப் பெற்றுத் தரும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். மனதில் புதுவிதமான உற்சாகம் பிறக்கும். காத்திருந்த காரியம் நல்ல முறையில் நிறைவேறும். உங்கள் செயல்பாடுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.

வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். மகான்கள், ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கடகம்

குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். புதிய கற்றல்கள் கிடைக்கும். உழைப்பிற்கு மதிப்பு கிடைக்கும். இழந்த நம்பிக்கை மீண்டும் உருவாகும்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து நன்மை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

நெருக்கடியான சூழலிலும் அமைதியாக செயல்படுவீர்கள். தொழில் தொடர்பான மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும்.

வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். புதிய முயற்சிகள் நல்ல துவக்கத்தைப் பெறும். உறவினர்களுடன் இணக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

கன்னி

எதிர்பார்த்த சந்திப்பு நடைபெறலாம். புதிய தொடர்புகள் எதிர்கால நன்மையைத் தரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

துலாம்

பழைய பிரச்சினைக்கு புதிய தீர்வு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தினரின் ஆலோசனை நன்மை தரும்.அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும்.

திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் மிகும். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

பொருளாதார விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். அன்பான வார்த்தைகள் பல பிரச்சினைகளை தீர்க்கும்.

வாழ்க்கையில் நல்ல மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும்.வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். உடல் உஷ்ணம் அதிகமாகும். ஆதலால், இளநீர் மற்றும் மோர் அருந்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். மகிழ்ச்சியான செய்தி குடும்பத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தும். சிந்தித்து செயல்படுவதால் வெற்றி நிச்சயமாகும். உங்களின் நல்ல மனப்பான்மை பலரையும் கவரும்.

சுபகாரியம் விரைவில் கூடி வரும். உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். சம்பள பாக்கி கைக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

மகரம்

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். முதலீடுகளில் கவனம் அவசியம். உற்சாகம் குறையாமல் இருக்கும்.

எதிர்கால திட்டங்கள் வெற்றி பெறும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்வண்ணம்

கும்பம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

இன்று எடுக்கும் முடிவு எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும். திறமைகளை வெளிப்படுத்த ஏற்ற வாய்ப்பு அமையும். விட்டுக்கொடுத்து செல்வதால் உறவுகள் வலுப்பெறும். எதிர்பார்த்த அழைப்பு அல்லது தகவல் வந்து சேரலாம்.

செயலில் வேகம் காட்டினால் சாதகமான பலன் கிடைக்கும்.வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா